சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேம்லி 2வது நாள் வசூல்… அட இத்தனை கோடியா?

tourist family
Tourist family: 24 வயதே ஆன அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த படம் டூரிஸ்ட் பேம்லி. மில்லியன் டாலர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏற்கனவே குட்நைட், லவ்வர் என 2 சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இலங்கை அகதிகளாக தமிழகம் வந்து பிழைக்கிறார்கள். இதற்காக பொய் சான்று வைத்துக் குடியேறுகிறார்கள். இதனால் வரும் பிரச்சனைகள் தான் படம்.
படத்தில் சசிக்குமார், சிம்ரன் இலங்கைத் தமிழ் பேசி நடித்துள்ளனர். படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் நல்ல ஒர்க் அவுட் ஆகியுள்ளதாம். கண்ணீரைக் கசிய விட்டு விடும் என்கிறார்கள். படத்தில் நடக்கும் அடுத்தடுத்த காட்சி யூகிக்க முடியாதபடி பல டுவிஸ்ட்களுடன் உள்ளது.
ஒவ்வொரு சின்ன கேரக்டருக்கும் கூட அவர்களின் பின்புலம் சொல்லப்படுவது கதையை சுவாரசியமாக எடுத்துச் சொல்கிறது. படத்தில் எம்எஸ்.பாஸ்கர், இளங்கோ குமாரவேல், சிறுவனாக வரும் கமலேஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். சசிக்குமார் அநியாயத்துக்கு நல்லவனாக இருக்கிறார்.
இரக்கம், உதவும் குணத்துக்கு அவரை விட்டா வேற ஆளே கிடையாதுன்னு சொல்லலாம் போல. அயோத்தி படத்திற்குப் பிறகு சசிக்குமாரின் கதை தேர்வுகள் அருமையாக உள்ளது. அவரது படங்கள் எல்லாம் பேசும் விதத்தில் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
இயக்குனர் எந்தப் பின்புலமும் இல்லாமல் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு சசிக்குமாரும் கதை நன்றாக இருந்ததால் படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. முதல் நாளில் உலகளவில் இந்தப் படம் இரண்டரை கோடியை வசூலித்துள்ளதாகதெரிய வருகிறது.

படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 2 கோடியும், 2வது நாளில் 1.65 கோடியும் என மொத்தம் 3.65 கோடியை வசூலித்துள்ளது.