நெஞ்சை நக்குதுக்குன்னே நாலு சீன்..! டூரிஸ்ட் பேம்லி டிராமாவா? பொளந்துட்டாரே புளூசட்டை மாறன்

by sankaran v |   ( Updated:2025-05-01 20:34:32  )
bluesattamaran, tourist family
X

bluesattamaran, tourist family

Tourist family: அபிஷன் ஜீவந்த் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் டூரிஸ்ட் பேம்லி படம் நேற்று வெளியானது. இந்தப் படம் குறித்து பிரபல விமர்சகர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

ராமேஸ்வரத்துல வந்து இலங்கை அகதி பேம்லி ஒண்ணு வந்து இறங்குது. அங்கே விலைவாசி அதிகமாகிடுச்சு. இனி இங்கே தான் வாழமுடியும்னு வர்றாங்க. இங்கே அவங்க போலியான அடையாளங்களை உருவாக்கிக்கிட்டு வாழறாங்க. அவங்களுக்கு ஒரு சிக்கல் வருது. அப்புறம் என்ன ஆகுதுங்கறது தான் கதை.

அயோத்தி படம் கொடுத்த வெற்றியும், தைரியமும் தான் இந்தப் படத்தில சசிக்குமாரை நடிக்க வச்சிருக்கு. அதுவும் ஒரு ஃபீல் குட் படம்தான். அந்தப் படத்துல எல்லாமே தேவையா இருக்கும். ஆனா இதுல ஊருல இருந்து வர்றதுக்கே பெரிய காரணம் இல்ல. பொருளாதார பிரச்சனையைத் தவிர, போர்க்காலம்னா கூட சரியா இருக்கும். இங்கே நல்ல வேலை கிடைச்சிடுது. வீடு கிடைச்சிடுது, ஸ்கூல் அட்மிஷன் கிடைச்சிடுது. ஒரு பிரச்சனையும் இல்லை.

ஒளியத் தெரியாதவன் தலையாரிவீட்ல போய் ஒளிஞ்சமாதிரி ஆகிடுது. போலீஸ்காரன் வீட்ல ஒளியுறாங்க. அவரே ஒரு சிரிப்பு போலீஸ். அவரு எங்கே புடிக்கப்போறாரு. கதையில கிரிப் இல்லை. இலங்கைத்தமிழை வச்சி காமெடி பண்ணிருக்காங்க. அதெல்லாம் ஒர்க் ஆகிருக்கு. தேவைக்கேற்ற மாதிரி கதையை வளர்த்து விட்டுருக்காங்க. நெஞ்சை நக்குதுக்கே நாலு சீனை வச்ச மாதிரி இருக்கு.

படத்துல நல்ல விஷயம் என்னன்னா இலங்கைத்தமிழை வச்சி உயிரெடுக்காம தேவைக்கேற்ப புரியறதுக்குத்தான் பயன்படுத்திருக் கோம்னு டைட்டில் கார்டுலயே போட்டுறாங்க. சில சீன்கள் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. முழுக்கதையும் இயல்பை மீறி இருக்குறதால ரசிக்குற மாதிரி இல்லை. படத்தை உண்மைக்கு நெருக்கமா எடுத்துருந்தா தியேட்ரிக்கல் எக்ஸ்பீரியன்ஸாவது கிடைச்சிருக்கும். ஆனா இது டிராமா பார்த்த மாதிரிதான் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story