Tourist Family: சிம்ரன் என்ன கிழவியா? ஜாலியா போய் அழுதுட்டு திரும்பலாமாம்… டூரிஸ்ட் பேம்லியை ரசித்த பயில்வான்

tourist family, bayilvan
மே தினத்தை ஒட்டி இன்று வெளியாகி உள்ள படம் டூரிஸ்ட் பேம்லி. இந்தப் படம் குறித்த விமர்சனத்தை பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பார்க்கலாமா…
சசிக்குமார் நடிப்பில் டூரிஸ்ட் பேம்லி இன்று வெளியாகி உள்ளது. இது மனித நேயத்தை வலியுறுத்துகிற மிகச்சிறந்த வாழ்வியல் படம். இது பல இடங்களில் கண்ணீரை வரவழைக்கிறது என்கிறார் பயில்வான் ரங்கநாதன். இலங்கையில் இருந்து சசிக்குமார் பேம்லி கள்ளத்தோணியில் சென்னைக்கு வருகிறார்கள். எப்படியும் அந்த சிலோன் பாஷை காட்டிக் கொடுத்து விடுகிறது.
ஆனா யோகிபாபு சிம்ரன் அண்ணனா இருக்கிறார். அவர் யாரிடமும் பழகக்கூடாதுன்னு சிம்ரனிடம் சொல்லி விடுகிறார். சசிக்குமார் ரொம்பவும் நல்ல மனிதநேயமிக்க மனிதராக இருக்கிறார். பலருக்கும் உதவி செய்து எல்லோருடைய மனதிலும் நிறைந்து இருக்கிறார். ராமேஸ்வரத்துல ஒரு குண்டுவெடிப்பு நடக்கிறது. அதைத்தேடி இலங்கையில் இருந்து வந்தவர்களை சென்னையில் தேடுகிறார்கள். கிளைமாக்ஸ் மிகச்சிறப்பாக இருக்கிறது.
இந்தப் படம் வழக்கமான படமில்லை. மனிதநேயத்தை வலியுறுத்துகிற மிகச்சிறந்த வாழ்வியல் படம். பல இடங்களில் கண்ணீர் விட வைக்கிறது. இந்தப் படத்தில் லாஜிக் மீறல்கள் உள்ளது. சிம்ரன் படு கிழவியா இருக்கு. 70 வயசு கிழவி மாதிரி இருக்கு. அதுக்குப் பதிலாக குளுகுளுன்னு ஒரு ஆர்டிஸ்டைப் போட்டுருக்கலாம். நடிப்பதற்கும் சிம்ரனுக்கு வாய்ப்பு இல்லை. சசிக்குமாருக்கு நடிக்கத் தெரியாது. ஆனா அவரிடம் இயல்பாகவே வேலை வாங்கி இருக்கிறார். ஷான் ரோல்டன் மியூசிக் அருமை. கிளைமாக்ஸ் சாங் சூப்பர்.

அபிஷந்த் ஜீவிந்த் அறிமுக இயக்குனராக இருந்தாலும் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பெண்கள், குழந்தைகளைக் கவரும் படம். ஓட்டர் ஐடி, ஆதார் கார்டை எல்லாம் யோகிபாபு அவ்வளவு தைரியமா எப்படி தயாரிச்சிக் கொடுக்குறார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எம்எஸ்.பாஸ்கர் மிகச்சிறப்பான நடிப்பு. இரும்பு மனிதனுக்குள் ஒரு இதயம் இருக்கும். அப்படிப்பட்டவர்.
சசிக்குமாரும் அவரும் வரும் காட்சிகள் செம. டூர் போனா சந்தோஷமா இருக்கும் அல்லவா. அது போல இந்தப் படம் நமக்கு ஒரு உணர்வைத் தருகிறது. இது வழக்கமான சினிமான்னு நம்பி வராதீங்க. பொழுது போக்கு படம் அல்ல. மனிதம் சம்பந்தப்பட்ட படம். டான்ஸ், காமெடி, குத்தாட்டம் கிடையாது. நட்பு, மனிதம், உறவு இருக்குற படம். நல்ல படம் பார்த்த திருப்தி. டூரிஸ்ட் பேம்லி ஜாலியா போய் படம் பார்த்து அழுதுட்டுத் திரும்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.