சினிமாவில் செய்த தவறால் மனைவியின் தாலியை விற்ற டி.ஆர்.மகாலிங்கம்!.. அட கொடுமையே!..

by சிவா |
mahalingam
X

தமிழ் திரையுலகில் 1940 முதல் 1950 வரை பிரபலமான நடிகராக இருந்தவர்தான் டி.ஆர்.மகாலிங்ம். தியாகராஜ பாகவதரைப்போல சொந்த குரலில் பாடி நடிப்பவர் இவர். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து வந்த இவர் தனது 14வது வயதில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த நந்தகுமார் என்கிற படத்தில் அறிமுகமானார்.

இந்த படம் ஓடவில்லை என்றாலும் பாடல்களால் டி.ஆர்.மகாலிங்கம் பிரபலமானார். அதன்பின் பிரகலதா, பரசுராமர், சதி சுகன்யா, மனோன்மனி, பக்த ஹனுமான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் நடித்தார். இதில், ஸ்ரீவள்ளி என்கிற திரைப்படம் அவரை பெரிய ஹீரோவாக மாற்றியது. இந்த படத்தில் கடவுள் முருகனாக அவர் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்

அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். இன்பவள்ளி, லைலா மஜ்னு என பல படங்களிலும் நடித்தார். இவரின் படங்கள் நல்ல வசூலை பெற்றதால் சொந்த படமெடுக்கும் ஆசை அவருக்கு வந்தது. அங்குதான் அவருக்கு ஏழரை துவங்கியது.

mahalingam

சுகுமார் புரடெக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் சொந்தமாக ஒரு சினிமா கம்பெனியை உருவாக்கி அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரிக்க துவங்கினார். டி.கே.ராமச்சந்திரன், சாரங்கபாணி, சந்திரபாபு ஆகிய நடிகர்கள் அவரின் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தனர்.

இதையும் படிங்க: சிவாஜியுடன் போட்டி போட்ட சிவக்குமார்!.. நடிகர் திலகம் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?…

மச்ச ரேகை, மோகன சுந்தரம், விளையாட்டு பொம்மை என அவர் தயாரித்து நடித்த படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது. அதன்பின்னரும் பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கடனாளி ஆகி மனைவியின் தாலியை கூட விற்கும் நிலைக்கு சென்றார்.

அவர் தயாரிப்பாளராக மாறியதும் அவரை வைத்து படமெடுத்த பல தயாரிப்பாளர்கள் அவரை கைவிட்டனர். அவரின் மாமனர் மட்டும் சில சொத்துக்களை மீட்டு கொடுத்தார். கடைசியாக இவரின் நடிப்பில் 1977ம் வருடம் ஸ்ரீ கிருஷ்ண லீலா என்கிற படம் வெளியானது. ஒருகட்டத்தில் எல்லாம் இழந்து தனது 53வது வயதில் 1978ம் வருடம் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 12 கார்கள், சொத்து என புகழின் உச்சியில் இருந்த நடிகர்! வேண்டாத வேலை பார்த்து நடுத்தெருவுக்கு வந்த அவலம்

Next Story