Connect with us
tr

Cinema History

12 கார்கள், சொத்து என புகழின் உச்சியில் இருந்த நடிகர்! வேண்டாத வேலை பார்த்து நடுத்தெருவுக்கு வந்த அவலம்

T.R.Mahalingam: அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்கு எல்லாம் முன்னாடி சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம். இவர் நடித்த ஸ்ரீவள்ளி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து அந்தப் படத்தை தயாரித்த ஏவிஎம் மெய்யப்பச்செட்டியாருக்கு பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்தது.

நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் என பன்முகக் கலைஞராக திகழ்ந்து வந்தார் மகாலிங்கம்.உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் பக்திப்பாடல், காதல் பாடம் பாடுவதிலும் வல்லவராக வந்தார்.

இதையும் படிங்க: அஜித் நடத்தி வரும் அறக்கட்டளையை பற்றி யாருக்காவது தெரியுமா? ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யமான தகவல்

ஒரு காலத்தில் சினிமாவிற்கே பெருமை சேர்த்த நடிகனாக வலம் வந்த மகாலிங்கம் தயாரிப்பு பணியில் இறங்கியதுதான் அவர் செய்த பெரிய தவறாக அமைந்தது. தயாரிப்புப் பணியில் இறங்கி இருந்த எல்லாச் சொத்துக்களையும் இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்திருக்கிறார்.

அதற்காக தன் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை விற்று ஒரு நாள் குடும்பத்தை ஓட்டினாராம். 12 கார்கள் ,ஏகப்பட்ட சொத்துக்கள் என சகலமும் இருந்த மகாலிங்கம் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை பற்றி தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கன்ஃபார்மா 10 படம்தான்! லோகேஷ் முடிவுக்கு பின்னணியில் இருக்கும் ரகசியம் – இந்தளவு வேதனையா?

அதாவது தயாரிப்பில் இறங்கியதும் பட வாய்ப்புகள் இவரைத்தேடி வரவில்லையாம். முதலாளியாக பார்க்கப்பட்ட மகாலிங்கத்தின் அலுவலக பெயரில் அன்று இருந்த ஹோட்டல் அறைகளை எல்லாம் இவருக்கே தெரியாமல் சிலர் புக் செய்து வசதிகளை அனுபவித்திருக்கின்றனர்.

மேலும் வீண்செலவுகளில் அவரின் மொத்த பணமும் விரயமாகிக் கொண்டிருந்ததாம். இப்படி அவரிடம் இருந்த அனைத்து சொத்துக்களும் பறிப் போய்க் கொண்டிருக்கையில் அவருக்கு பக்க பலமாக உதவி செய்தவர் அவருடைய மாமனர்தானாம்.

இதையும் படிங்க: அடுத்த படத்திற்கு ரெடியான கேஜிஎப் ஹீரோ.. இயக்குனர் யார்னு கேட்டா ஷாக் ஆவீங்க!..

அவர்தான் மகாலிங்கம் இழந்த சொத்துக்களை எல்லாம் மீட்டுக் கொடுத்தாராம். அவர் மட்டும் தக்க சமயத்தில் உதவி செய்யவில்லை என்றால் நான் என்னாகியிருப்பேன் என்றே தெரியாது என அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறாராம் மகாலிங்கம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top