காஃபி கொண்டுவந்த பெண்ணை ஹீரோயினாக்கிய இயக்குனர்! - பின்னாளில் முதல் கனவுக்கன்னியாக மாறிய தருணம்

by Rohini |   ( Updated:2023-11-11 15:24:31  )
raja
X

raja

T.R.Rajakumari: ராஜாயி என்ற பெயர் கொண்ட இவருக்கு ராஜகுமாரி என பெயரிட்டவர் தமிழ் பட உலகின் பழந்தமிழ் இயக்குனரான கே.பி.சுப்பிரமணியம்தான். அந்த காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி சினிமாக்களுமே சென்னையை மையமாக கொண்டுதான் இயங்கி வந்தன.

இப்போதைய காலகட்டம் மாதிரி மலையாள சூப்பர்ஸ்டார், கன்னட சூப்பர் ஸ்டார் என தனித்தனியாக இல்லாமல் ஒரே நடிகர்தான் அனைத்து மொழி சினிமாக்களுக்கும் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும். அந்தளவுக்கு ஒற்றுமை கொண்டு இயங்கி வந்தன.

அப்படி ஒரு காலகட்டத்தில் வந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவர் நடிகை ஜோதிலட்சுமியின் அம்மாவும் நடிகையுமான சுப்புலட்சுமிக்கு நெருங்கிய உறவினராவார். ஒரு சமயம் சுப்பிரமணியம் தனது கச்சத்தேவயாணி என்ற படத்திற்கு நடிகையை தேர்வு செய்யும் பொருட்டு சுப்புலட்சுமி வீட்டுக்கு சென்றாராம்.

இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..

இவரை உட்கார வைத்த சுப்புலட்சுமி ‘ராஜாயி கொஞ்சம் காஃபி கொண்டு வார்’ என்ற குரல் ஒலிக்க உள்ள இருந்து ஒரு பெண் காஃபி எடுத்துக் கொண்டு வந்து சுப்பிரமணியத்திடம் கொடுத்திருக்கிறார். ராஜாயியை பார்த்ததும் சுப்பிரமணியம் மனதில் இவள்தான் கச்சத்தேவயாணி படத்திற்கு ஹீரோயின் என முடிவு செய்துவிட்டார்.

ஆனால் ராஜகுமாரி கருநிற தோற்றத்துடன்தான் இருப்பாராம். இருந்தாலும் அவரிடம் உள்ள வசீகரம் சுப்பிரமணியத்தை இழுத்திருக்கிறது. உடனே அவரிடமும் சுப்புலட்சுமியிடம் இது சம்பந்தமாக பேசிவிட்டு மறு நாள் லுக் டெஸ்ட் எடுப்பதற்காக மேக்கப் போட்டு வரச் சொல்லியிருக்கிறார் சுப்பிரமணியம்.

அந்த காலத்தில் ஹரிபாபு என்ற ஒப்பனை கலைஞர்தான் மிகவும் பிரபலமானவராம். இவர் வீட்டிற்கு சென்றுதான் முன்னனி நடிகர் , நடிகையர் மேக்கப் போட்டுக் கொள்வார்களாம். அதனால் அதிகாலையில் இருந்தே இவர் வீட்டின் முன் பல கார்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்குமாம்.

இதையும் படிங்க: தலைவர் 171, 172 மட்டுமில்லை!.. தலைவர் 173 படத்துக்கும் இயக்குநரை லாக் பண்ண ரஜினிகாந்த்?..

ஹரிபாபுவிடம் ஏற்கனவே சுப்பிரமணியம் ராஜாயி என்ற பெண் மேக்கப் போட வருவார். அதனால் போட்டு அனுப்பி விடு. அவர்தான் என் படத்தின் ஹீரோயின் என்று சொல்லியிருக்கிறார். சொன்னபடியே ராஜாயி அங்கு செல்ல ஹரிபாபு ‘யாருமா நீ’ என கேட்க சுப்பிரமணி அனுப்பி வைத்ததாக ராஜாயி சொல்லியிருக்கிறார்.

கேட்டதும் ஹரிபாபுவுக்கு ஒரே அதிர்ச்சியாம். இப்படி ஒரு பெண்ணை எப்படி அவர் ஹீரோயினாக்கினார் என்ற குழப்பம். ஏனெனில் ராஜாயின் நிறம் அப்படி. இருந்தாலும் சுப்பிரமணியத்திடம் ஹரிபாபு ‘ நல்லா யோசிச்சுதான் இந்த பெண்ணை ஹீரோயினாக தேர்வு செய்தீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

உடனே சுப்பிரமணியம் ‘ நான் சொன்னதை மட்டும் செய். மேக்கப் போட்டு அனுப்பி விடு’ என்று சொல்ல , எல்லாம் காலக் கொடுமை என நினைத்துக் கொண்டு ராஜாயிக்கு மேக்கப் போட்டு அனுப்பிவிட ராஜாயியும் செட்டிற்கு சென்றாராம், எதிர்பார்த்ததையும் விட கொள்ளை அழகில் இருந்திருக்கிறார் ராஜாயி.

இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..

அதன் பின் அவர் பெயரை ராஜகுமாரி என மாற்றம் செய்து கச்சத்தேவயாணி என்ற படத்தின் ஹீரோயினாக்கினார் சுப்பிரமணியம். ராஜகுமார் முதன் முதலில் நடித்த படம் என்றால் குமார குலோத்துங்கன் என்றாலும் முதலில் வெளிவந்த படமாக கச்சத்தேவயாணி அமைந்தது.

ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வசீகரமான குரல், நடனத் திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவராக விளங்கினார். அதுமட்டுமில்லாமல் சினிமா பட உலகின் முதல் கனவுக்கன்னியாகவும் விளங்கினார்.

Next Story