Categories: latest newstelevision

நீ எல்லாம் ஒன்னுமே இல்ல.. சீரியல் ஹீரோவால் அசிங்கப்பட்ட விஷ்ணு!… இதுக்காகதான் பிக்பாஸ் எண்ட்ரியாம்!

Biggboss Vishnu: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது இதில் முதல் பைனலிஸ்ட்டாக தேர்வானவர் விஷ்ணு. அமுல் பேபி முகத்துடன் சிரித்துக்கொண்டே இருப்பவரின் வாழ்க்கையில் எக்கசக்க சோகங்கள். அப்படி இவருக்குள்ள என்ன தான் இருக்கு? எதுக்காக இத்தனை போராடி இந்த பிக்பாஸ் போன்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

விஷ்ணுவை வளர்த்தது அவர் சித்தப்பா தானாம். அவருக்காகவே கல்யாணமே செய்துக்கொள்ளாமல் இருந்தவர். மீடியா துறையை எடுக்கும் போது குடும்பமே எதிர்க்க அவர் சித்தப்பா தான் துணை நிற்கிறார். அவர் நடிக்க போக அதற்கும் எதிர்ப்பு வந்ததாம். இருந்தும் கஷ்டப்பட்டு கனா காணும் காலங்கள், ஆபிஸ் சீரியலில் வாய்ப்பு வாங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘பொன்னியின் செல்வன்’படத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா? தவறை சுட்டிக் காட்டிய பொன்வண்ணன்

ஷூட்டிங் ஒரு நாள் சென்றால் 750 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுப்பார்களாம். இதை தொடர்ந்து அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வர அப்படம் பெரிய அளவில் ரீச் தரவில்லை. இந்நிலையில் அவருடன் விஜய் டிவியில் வேலை செய்த பிரபலம் ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் நடிகராகி விட்டார். 

அவர் விஷ்ணுவை வெகுவாக அவமானப்படுத்தினாராம். உனக்கெல்லாம் நடிக்கவே தெரியாது. அமுல் பேபி மாதிரி இருக்க எனச் சொல்லி விஷ்ணுவை காயப்படுத்தி இருக்கிறார். அந்த அவமானத்தை தனக்குள் எடுத்துக்கொண்ட விஷ்ணு இதற்காகவே கடுமையாக உழைத்தார். அந்த ஹீரோக்கு முன்னால் உயர வேண்டும் என்பதற்காகவே தான் கடந்த மூன்று சீசன்களாக போராடி இந்த சீசனின் வாய்ப்பை பெற்றாராம்.

இதையும் படிங்க: ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம் என்ன? பத்திரிக்கையாளர் கேள்விக்கு நச் பதில் சொன்ன பாலச்சந்தர்…

இத்தனை போராட்டங்களுக்கு இடையே உள்ளே வந்த விஷ்ணு டிக்கெட் டூ ஃபினாலேவில் வென்று அந்த டிக்கெட்டை பெற்று முதல் பைனலிஸ்ட்டாக தேர்வானார். ஆனாலும் கூட கடைசி மேடை ஏறாமல் விஷ்ணு வெள்ளிக்கிழமையான இன்று வெளியேறிவிட்டார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Akhilan

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

42 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

1 hour ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago