காத்திருந்த கழுகின் இரை! வெளியான ‘வணங்கான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு?
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வணங்கான். அந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாலாவின் படங்களை பொருத்தவரைக்கும் அவருடைய படங்களில் எதார்த்தம் அதிகமாகவே இருக்கும்.
அந்த அளவுக்கு தன் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை அந்தக் காட்சியை பார்ப்பதற்கு ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிட வைப்பவர். இவருடைய கெரியரில் இல்லாத அளவுக்கு இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தன.
முதலில் சூர்யாவை வைத்து இந்த படத்தை எடுத்த நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு சூர்யா விலக அருண் விஜய் இந்த படத்திற்குள் நுழைந்தார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் என்ற நடிகை நடித்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து மிஷ்கின், சமுத்திரக்கனி போன்ற பல முக்கியமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையில் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது.
படத்தை பார்த்த பலரும் காத்திருந்த கழுகின் இரை. தனக்குள் இருக்கும் நடிப்பு அரக்கனை களம் இறக்கப்பட்டது போல் உள்ளது அருண் விஜயின் நடிப்பு என கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு படத்தின் டிரைலரில் அருண் விஜயின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கின்றது.
அர்த்தமுள்ள திரைக்கதையில் இந்த வணங்கானுக்கும் இடம் உண்டு என்ற வகையில் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் படத்தின் இசையில் 50 சதவீதம் 'நான் கடவுள்' படத்தில் இளையராஜா போட்ட மியூசிக் மாதிரியே இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.
இருந்தாலும் அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு படத்தின் டிரைலர் நம்மை பழைய பாலாவின் பக்கம் திரும்ப கொண்டு செல்கிறது. இந்த படத்தை உதாசீனப்படுத்தியவர்கள் பலபேர் முகத்தில் கரியை பூச வேண்டும் இந்த படம் என்றும் தங்களுடைய கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இருந்தாலும் டீசர் அளவுக்கு படத்தின் ட்ரெய்லர் இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாகவே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் படம் எந்த அளவு நம்மை வியக்க வைக்கிறது என்று.