ட்ராமா படம் எப்படி இருக்கு? மோசமான விஷயமாச்சே... உண்மைச் சம்பவமா இருக்குமோ?

by sankaran v |
trauma
X

trauma

இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ட்ராமா. படத்தின் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன். சமுதாயத்துக்குத் தேவையான ஆனால் பேசப்பாடத ஒரு விஷயத்தைப் படத்தில் எடுத்துருக்காங்க. அந்த வகையில இது தரமான படம்.

விவேக் பிரசன்னா இந்தப் படத்துல ஹீரோ. புளூசட்டை மாறன் இந்தப் படத்தைப் பார்க்கணும். அவரு ஒரு தடவை சொன்னாராம். இவருலாம் ஒரு நடிகரா? சும்மா சும்மா வந்து நின்னுட்டு போறாருன்னு. ஆனால் இந்தப் படத்துல அவரோட நடிப்பு அருமை. அதனால புளூசட்டை மாறன் பார்க்கணும் என்கிறார் பிரபல நடிகர் அருணோதயன். இவர் படத்தைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க.

இந்தப் படத்துல வர்ற சம்பவங்கள் கற்பனை மாதிரி தெரியல. ஏதோ நடந்துருக்கு. காதுவழியா கேட்டுருக்கு. அதைத்தான் இந்தப் படமா எடுத்துருக்காரு. மோசமான ஒரு விஷயத்தை எடுத்துப் பேசிருக்காரு.

செயற்கை கருத்தரிப்பு மையத்தை மையமாக வைத்துத்தான் கதை நகருது. அது திருமணமான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிகக் குறைந்த நபர்களுக்குத்தான் தேவைப்படும். 2 டிராக் போகுது. அது ஒரு பாயிண்ட்ல கனெக்டாகும்போது படம் கவனத்தை ஈர்க்கிறது.

trauma

trauma

மாரிமுத்து, பூர்ணிமாரவி, விவேக் பிரசன்னா எல்லாருமே அருமையா நடிச்சிருக்காங்க. குழந்தை இல்லங்கறது மிகப்பெரிய பிரஷர். சொசைட்டி எப்படி அதைக் கொடுக்குது? திருமணமான தம்பதியருக்கு அந்த ஏக்கம் எப்படி இருக்குன்னு அழகா எடுத்துருக்காங்க. பெரிய பெரிய நடிகர்கள் நடிச்சாலே பாடலைப் பார்க்க மாட்டாங்க. ஆனால் இந்தப் படத்துல பார்க்குற மாதிரி எடுத்துருக்காங்க. சொசைட்டியில் நடக்குற விஷயங்களையும், அதைக் கமர்ஷியலாகவும் சொன்னதுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 1மணி நேரம் 52 நிமிடங்கள் தான். இது ஒரு கிரைம் த்ரில்லர் படம். விவேக் பிரசன்னா, பிரதோஷ், சாந்தினி தமிழரசன், பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசை அமைத்துள்ளார். அஜீத் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகன் வேல் எடிட்டிங் செய்துள்ளார். இன்று வெளியான பல படங்களில் இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

Next Story