More
Categories: Cinema News latest news

விஜயை வச்சு படம் எடுத்து கடனாளியா போறீங்களா? படத்தை டிராப் செய்த தயாரிப்பாளர்

Actor Vijay:கோலிவுட்டில் ஒரு வசூல் சக்கரத்தியாக திகழ்ந்தவர் நடிகர் விஜய். இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று விஜய்யின் படங்களுக்கு ஒரு நல்ல ஓப்பனிங் இருந்து வருகிறது. அதனால் கதையையும் தாண்டி அவருடைய படங்கள் நல்ல ஒரு வியாபாரமாக பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்து பல மடங்கு லாபத்தை விஜயின் மூலமாக பல தயாரிப்பாளர்கள் சம்பாதித்து வருகின்றனர். தற்போதைக்கு விஜய் ஒரு வியாபார பொருளாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இன்னும் அவருடைய கெரியரில் இரண்டு படங்கள் தான். அதன் பிறகு அவர் அரசியலுக்கு நுழைய இருக்கிறார். தனது அடுத்த கட்ட அரசியலில் அவருடைய பயணம் எந்த மாதிரியான ஒரு பயணமாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டீசன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்பி சவுத்ரியின் நிறுவனம் அதனுடைய நூறாவது படத்தை விஜயை வைத்து எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவாக கூறிவந்தது. தயவுசெய்து அதை மட்டும் செய்யாதீர்கள் என ஆர் பி சவுத்திரிக்கு அறிவுரை கூறியிருக்கிறாராம் திருப்பூர் சுப்பிரமணியன். கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் இந்த தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ஒரு பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ஆர் பி சவுத்ரியின் நிறுவனம்.

அதனால் திருப்பூர் சுப்பிரமணியம் ஆர் பி சவுத்ரி இடம் இந்த சினிமாவில் நாம் நன்கு சம்பாதித்து விட்டோம். எந்த ஒரு கடனும் இல்லாமல் அக்கவுண்டில் தாராளமாக பணம் இருக்கிறது .வயதும் 70-க்கு மேலாகிவிட்டது. இன்னும் இருக்கப் போறதோ கொஞ்ச நாளைக்கு தான். அதனால் இருக்கிறவரை சந்தோஷமாக இருந்து விட்டு போய் விடுவோம். நூறாவது படத்தை ஒரு பெரிய ஹீரோவை வைத்து பண்ண வேண்டும் என்ற கனவில் நீங்கள் இறங்கினால் அந்தப் படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக 300 கோடியை தாண்டும்.

இதையும் படிங்க: எத்தனை படம் பண்ணினாலும் லைஃப்லயே மறக்க முடியாத படம் இதுதான்… இயக்குனர் லிங்குசாமி

கையில் இருந்து 25 கோடி போட்டாலும் மீதி 175 கோடி அல்லது அதற்கு மேல் வெளியில் இருந்து தான் நாம் கடன் வாங்க வேண்டும். அப்புறம் இருக்கிற காசு எல்லாம் தொலைத்து விட்டு மற்றவர்களை எதிர்பார்க்கும் சூழ்நிலையில் நம்முடைய நிலைமை வந்துவிடும். அதனால் அந்த கனவை எல்லாம் விட்டுவிட்டு நூறாவது படத்தை உங்கள் மகன் ஜீவா மற்றும் சில நண்பர்களை வைத்து ஒரு நல்ல இயக்குநரை போட்டு தாராளமான ஒரு காமெடி படமாக எடுத்து வெளியிடுங்கள் என திருப்பூர் சுப்பிரமணியன் சௌத்ரியிடம் கூறியதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Published by
Rohini

Recent Posts