விஜயோட இருக்கு… ஆனால் அஜித்தோட இல்லை.. திரிஷா சொன்ன சீக்ரெட்…
Trisha: நடிகை திரிஷா தன்னுடைய சீக்ரெட் விஷயங்களை ஒரு பேட்டியில் சொல்லும்போது சக நடிகர்கள் குறித்து முக்கிய விஷயங்களை ஓபனாக உடைத்து இருக்கிறார்.
தமிழ்சினிமாவில் மெளனம் பேசியதே மற்றும் லேசா லேசா படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை திரிஷா. தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான விஜய் மற்றும் அஜித் படங்களில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: மாஸ்டர் சாதனையை முறியடிக்குமா கோட்?!.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?!..
தொடர்ந்து அவரின் கல்யாண பிரச்னையால் கோலிவுட்டில் சறுக்கினார். இருந்தும் தனி நாயகியாக சில படங்களில் நடித்து வந்தார். இருந்தும் அப்படங்கள் திரிஷாவை பெரிய இடத்துக்கு அழைத்து செல்லவில்லை. சுமார் வரவேற்பு மட்டுமே கொடுத்தது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து புகழ் பெற்றார்.
இரண்டாவது இன்னிங்ஸின் வெற்றியால் தற்போது மீண்டும் கோலிவுட்டில் முக்கிய இடம் பிடித்து இருக்கிறார். லியோ, விடாமுயற்சி படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் திரிஷா தன்னுடைய முக்கிய நடிகர்களை மொபைல் போனில் எப்படி சேவ் செய்து வைத்திருக்கிறார் என்ற உண்மையை சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: என்னங்க அம்புட்டு பஞ்சமா? தங்கலான் படத்தின் முக்கிய முடிவு… விக்ரம் சொன்ன நியூஸ்…
அதில், சிம்புவின் எண்ணை தன்னுடைய மொபைலில் சிம் என சேவ் செய்து வைத்து இருக்கிறாராம். தனுஷ் எண்ணை டி என்றும், விஜயின் எண்ணை வி என்றே சேவ் செய்துள்ளாராம். ஆர்யாவின் எண்ணை ஜாம் என்றும், விக்ரமின் பெயரை கென்னி என சேவ் செய்துள்ளாராம்.
சரி அஜித்தின் எண்ணை எப்படி சேவ் செய்து வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு என்னிடம் அவர் எண் இல்லை. அவர் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. அதனால் அவரிடம் போனில் பேசியது இல்லை என திரிஷா குறிப்பிட்டு இருக்கிறார்.