Categories: Entertainment News

லவ் செட் ஆகிடுச்சா?.. ரோஜா பூங்கொத்துடன் திரிஷா!.. காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் பாருங்க!..

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை திரிஷா ரோஜா பூங்கொத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தான் காதலர் தினத்தை கொண்டாடியதை சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளார். நயன்தாரா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் தங்கள் கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.

40 வயதாகும் நடிகை திரிஷா இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே உள்ள நிலையில், தொடர்ந்து தான் காதலித்து வரும் சிக்னலை மட்டும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: லவ்வர்ஸ் டே அன்னைக்கும் லால் சலாமை சீண்டாத ரசிகர்கள்!.. மொய்தீன் பாய் மொத்த வசூல் இவ்வளவுதானா?..

ஆனால், காதலர் யார் என்பதை இதுவரை அறிவிக்கவே இல்லை. இந்நிலையில், இந்த ஆண்டு காதலர் தினத்துக்கும் நடிகை திரிஷா காதலர் தினத்தை தனது காதலருடன் கொண்டாடி உள்ளார். ரோஜா காதலர் கொடுத்த பூங்கொத்து போட்டோக்களை மட்டும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.

திரிஷாவின் லவ்வர் யாரு என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு நாய் ஒன்றுடன் இருக்கும் போட்டோவையும் திரிஷா வெளியிட்ட நிலையில், அதனுடன் தான் காதலர் தினத்தை கொண்டாடுனீங்களா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் என்னம்மா பாடுறாரு!.. கொடுத்து வச்ச நிவின் பாலி.. செம சாங்!..

நடிகர் விஜய்யும் திரிஷாவும் காதலித்து வருவதாக லியோ பட சமயத்தில் ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. லியோ முடித்து விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த திரிஷா அந்த படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், உடனடியாக சிரஞ்சீவி நடித்து வரும் விஸ்வம்பரா படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். தற்போது ஹைதராபாத்தில் தான் திரிஷா நடித்து வருவதாக கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே தனது காதலரை திரிஷா அறிமுகப்படுத்துவார் என தெரிகிறது.

Published by
Saranya M