24 மணி நேரத்தில் இத செய்யலைனா? த்ரிஷாவிடம் இருந்து பறந்த அதிரடி நோட்டீஸ்.. சொன்னத செஞ்சுட்டாங்களே
Actress Trisha: சில தினங்களாக த்ரிஷா குறித்த செய்திதான் ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. பிரபல கட்சியின் முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு த்ரிஷா குறித்த அவதூறான வார்த்தைகளை மீடியாக்கள் முன் கூறினார். இந்த வீடியோ வெளியானதில் இருந்தே அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி பெரும் பரப்பரப்புக்கு ஆளானது.
இந்திய சினிமாவிலேயே ஒரு உச்சம் தொட்ட நடிகையாக இருக்கும் ஒருவரை பற்றி கொஞ்சம் கூட வாய் கூசாமல் இவ்வளவு தைரியமாக சொல்கிறார் என்றால் அதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற வகையிலேயே இந்த செய்தி பற்றி எரிந்தது.
இதையும் படிங்க: அந்த டாக்டர் பட்டத்தை வாங்கிடாதீங்க!..கண்ணதாசனை எச்சரித்த சோ!.. இவ்வளவு நடந்திருக்கா!..
த்ரிஷாவுக்கு ஆதரவாக அந்த முன்னாள் நிர்வாகிக்கு எதிராக முதல் ஆளாக குரல் கொடுத்தவர் இயக்குனர் சேரன். ஆனால் இது வரைக்கும் நடிகர் சங்கம் சார்பாக எந்த ஒரு கருத்தும் சொல்லப்படவில்லை. அதன் பிறகே த்ரிஷா தனது இணையதள பக்கத்தில் சமீபகாலமாக இப்படியான அருவருக்கத்தக்க நபர்களை நான் சந்தித்து வருகிறேன் என்றும் இது சம்பந்தமாக இனி என் சட்ட ஆலோசகர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.
அவர் சொல்லியவாறே முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருக்கிறார்கள். அதில் இந்த நோட்டீஸ் அவர் கையில் சேர்ந்து 24 மணி நேரத்தில் பகிரங்கமாக மீடியாக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,
இதையும் படிங்க: முழுநேர அரசியல்வதி ஆவாரா விஜய்!.. அவரோட பிளான் இதுதான்!.. பிரபலம் என்ன சொல்றார் பாருங்க!…
எந்தெந்த சேனல்களில் எல்லாம் அவர் பேட்டி கொடுத்தாரோ அதே சேனல்களில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோவை பதிவிட வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரடியாக களத்தில் இறங்கிய த்ரிஷாவை பல பேர் பாராட்டி வருகிறார்கள்.