த்ரிஷா கூடலாம் நடிக்க முடியாது... அவங்களுக்கு வயசு ஆச்சு... கடுப்படித்த முன்னணி நாயகன்...
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் மெகா ஹிட் படத்தில் குந்தவையாக அசத்தி இருக்கிறார் நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 22 ஆண்டுகளாக இருக்கும் த்ரிஷாவுடன் நடிக்க முடியாது என ஒரு நடிகர் கூறியதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.
முதன்முதலில் ஜோடி படத்தில் ஒரே சீனில் வந்தாலும் த்ரிஷாவினை பலரும் ரசிக்க துவங்கினர். தொடர்ந்து அவருக்கு சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதில் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றாலும், த்ரிஷா நடிகையாக ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை நினைச்சித்தான் இதை செய்தேன்… குந்தவையின் சீக்ரெட்டை உடைத்த த்ரிஷா…
தொடர்ந்து, கோலிவுட்டின் முன்னணி நாயகர்களான சூர்யா, அஜித், விஜய், கமல் என பலருடன் நடித்து விட்டார். இன்றும் அவர் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தினை வைத்து இருக்கிறார். இதை அவரின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படமே நிரூபித்து இருக்கிறது. குந்தவையாக அவர் நடித்திருக்கும் காட்சிகளுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுவதாக சேதி.
இந்நிலையில், பத்து வருடத்திற்கு முன்னர் சூர்யாவையும், த்ரிஷாவையும் வைத்து படம் இயக்க முக்கிய இயக்குனர் முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து, சூர்யாவிடம் சொன்னபோது, த்ரிஷாவுக்கு வயசு ஆச்சு. அவங்க கூடலாம் நடிக்க முடியாது என தடாலடியாக தெரிவித்து விட்டாராம். இதனை இயக்குனர் அப்படியே எடுத்துக்கொண்டு போய் த்ரிஷாவிடம் கொளுத்தி விட்டு இருக்கிறார். அதில் கடுப்பான த்ரிஷா, முதல அவர வளர சொல்லுங்க. என்ன பேச வந்துட்டாரு எனச் சொல்லியதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இருவரும் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.