Categories: latest news

அட்லியை மொய்க்கும் 3 ஹீரோயின்கள்!.. ஹீரோ பக்கம் நைஸா காயை நகர்த்திய கில்லாடி இயக்குநர்!..

இயக்குனர் அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக உள்ள அந்த படத்திற்கு தற்போது ஹீரோயின் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லி இந்திக்கு செல்லும்போது ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடிக்க நயன்தாராவை தேர்வு செய்தார். அதேபோல முதன் முறையாக தெலுங்கிற்கு செல்லும் போதும் நயன்தாராவை ஹீரோயின் ஆக்குவாரா எழுந்த நிலையில், சமந்தாவின் பெயர் அடிபட்டது.

இதையும் படிங்க: பீப் சாங்கை விட மோசமான பாட்டு!.. பிக் பாஸ் டைட்டில் வின்னரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!..

தெலுங்கு தொழிலாளர்கள் சமந்தாவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பலம் இருக்கும் நிலையில், ஏற்கனவே அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார். பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், சமந்தாவை அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அட்லி போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நடிகை திரிஷாவும் போட்டியில் இருந்து வருவதாக கூறுகின்றனர். இவர்கள் இருவரை தவிர்த்து நயன்தாரா மூன்றாவதாக போட்டிக்கு வருவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் அவர் நடிக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு பதிலாக பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த பேச்சு வார்த்தைகளை ரகசியமாக நடத்தியுள்ளதாக தகவல்கள் லீக் ஆக்கி உள்ளன.

இதையும் படிங்க: கர்வத்தால் பிரிந்ததா இந்த வெற்றி கூட்டணி?.. காலத்தாலும் பதில் சொல்லமுடியாத மர்மம்!…

தெலுங்கில் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் கல்கி படத்தில் நடித்துள்ள நிலையில், புஷ்பா படத்தின் வெற்றியை அறிந்து அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன் குழந்தை பெற்று முடித்த பின்னர் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இயக்குநர் அட்லி இரண்டு ஹீரோயின்களை இந்த படத்தில் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாகவும் அல்லு அர்ஜுன் டபுள் ஆக்‌ஷனில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக எந்த ஹீரோயின் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகிறது.

இதையும் படிங்க:கர்வத்தால் பிரிந்ததா இந்த வெற்றி கூட்டணி?.. காலத்தாலும் பதில் சொல்லமுடியாத மர்மம்!…

Saranya M

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

1 hour ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

4 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

17 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

17 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

18 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

19 hours ago