காதலால் கேரியரை தொலைத்த த்ரிஷா… ஒதுக்கி வைத்தவர்களை தேடி வரவைத்த கம்பேக் பின்னணி..
Trisha: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 23 வருடங்களாக ஒரு நடிகை இன்னமும் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக இருக்கிறார் என்றால் அந்த பெருமை த்ரிஷாவையே சேரும். அப்படிப்பட்ட த்ரிஷாவிற்கு நடுவில் சில காலம் பெரிய போராட்டமாகவே இருந்தது.
லேசா லேசா படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆனால் கூட அவர் நடிப்பில் முதலில் ரிலீஸான திரைப்படம் என்னவோ மௌனம் பேசியதே தான். முதல் படத்திலேயெ அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. இதனால் கோலிவுட்டில் ஒரு இடத்தினை தக்க வைத்தார். அப்போது த்ரிஷாவிற்கும் ஒரு தொழிலதிபருக்கும் நிச்சயம் வரை சென்றது. ஆனால் அந்த விஷயம் திருமணத்துக்கே செல்லாமல் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 10 வயதிலேயே சொந்த வசனத்தை பேசிய எம்.ஜி.ஆர்!.. நாடகத்தில் மாஸ் காட்டிய பொன்மன செம்மல்...
அதன்பின், கோலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் த்ரிஷா கொடிக்கட்டி பறந்து வந்தார். அப்போது அவருக்கும் ராணாவிற்கு காதல் மலர்ந்தது. ஆனால் ராணாவின் குடும்பமான ராமநாயுடு கூட்டம் இதை ஆதரிக்கவில்லை. வெங்கடேஷ் மற்றும் நாகர்ஜூனா என அனைவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் அதன் பின் த்ரிஷாவிற்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
தெலுங்கில் ஒதுக்கப்பட்டது போல தமிழிலும் அவருக்கு அத்தனை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கதையின் நாயகியாக சில படங்களில் நடித்தார். அந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை கொடுக்கவே இல்லை. இந்நிலையில் மணிரத்னம் த்ரிஷாவினை நம்பினார்.
தன் கனவு ப்ராஜெக்ட்டான பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பினை த்ரிஷா சரியாக பயன்படுத்தி கொண்டார். நடிப்பில் பிச்சு உதறினார். இதையடுத்து அவருக்கு லியோ வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: என் வீட்டு பெட்ரூமை நீங்க ஏன் எட்டி பாக்குறீங்க…? நடிகைக்காக கோபத்தில் எகிறிய கமல்ஹாசன்… ஸ்பெஷலோ..!
தனி நாயகியாக மீண்டும் விஜயுடன் ஜோடி போட்டு இருக்கிறார். அதேவேளையில் விடாமுயற்சி படத்திலும் அஜித்தின் ஜோடியாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஹீரோஸ் மட்டுமே கம்பேக் கொடுத்து வந்த கோலிவுட்டுக்குள் த்ரிஷாவின் இரண்டாவது இன்னிங்ஸ் பெரிதளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.