அந்த டைரக்டர் என்னை தூங்கவே விடவில்லை!.. பல வருடம் கழித்து திரிஷா சொன்ன சீக்ரெட்..

by சிவா |
trisha
X

Actress Trisha: மிஸ்டர் மெட்ராஸ் அழகி பட்டத்தை பெற்றவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் சாதிக்க நினைத்தவருக்கு சினிமாவில் சின்ன வேடங்கள் கிடைத்தது. கதாநாயகிகளின் தோழியாக கூட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். லேசா லேசா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

நயன்தாராவுக்கெல்லம் சீனியர் இவர். படிப்படியாக இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார். விஜயுடன் திருப்பாச்சி, கில்லி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்த நடிகை இவர். தெலுங்கிலும் இவருக்கென ஒரு மார்க்கெட் உருவானது. சிரஞ்சீவிக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்தார்.

இதையும் படிங்க: அந்த நடிகர் கொடுத்த முத்தத்தில் மயங்கி நின்ற திரிஷா.. சீக்ரெட்டை லீக் செய்த பயில்வான் ரங்கநாதன்!…

சிம்பு, தனுஷ், விக்ரம் சூர்யா, விஷால், ஜெயம் ரவி, ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து திரிஷாவின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியது. மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கலக்கியிருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என மீண்டும் டேக் ஆப் ஆகிவிட்டார்.

இதையும் படிங்க: கட்டுனா இந்த பொண்ண தான்பா கட்டணும்! திரிஷாவை அழகாய் காட்டிய டாப் 5 திரைப்படங்கள்

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய திரிஷா விஜயுடன் அவர் நடித்த கில்லி படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த படத்தில் லைட் ஹவுஸ் ஒன்றை செட் அமைத்து இரவில் காட்சிகளை எடுத்தார்கள். ஒருநாள் இரவு விடிய விடிய படப்பிடிப்பு நடந்தது.

நானும், விஜயும் ரொமாண்டிக்காக பேசும் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், நான் தூங்கி வழிந்துகொண்டிருந்தேன். அப்படத்தின் இயக்குனர் தரணி என்னிடம் வந்து ‘இப்போது எடுக்க போவது ரொமாண்டிக் சீன். இப்படி தூங்கினால் எப்படி?’ என சொல்லி என்னை தூங்கவே விடவில்லை. ஏற்கனவே அன்று பகல் முழுக்க காட்சிகளை எடுத்தோம். இரவும் தூங்கவில்லை. அதிகாலை 2 மணிக்கு அந்த காட்சியை எடுத்தோம். திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு நாங்கள் படும் கஷ்டம் எதுவும் தெரியாது’ என திரிஷா கூறினார்.

இதையும் படிங்க: அஜித்தால பறிபோன பாலிவுட் பட வாய்ப்பு!.. தலையில் அடித்து கொள்ளும் திரிஷா!.. வட போச்சே!..

Next Story