Cinema History
சந்திரபாபு மனைவி விஷயத்தில் நடந்ததே வேறு!. அட வேற மாதிரி சொல்லிட்டாங்களே!…
Chandra babu: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரின் அப்பா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். சந்திரபாபுவை சிறு வயதில் தூக்கி கொஞ்சியவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது பலருக்கும் தெரியாது. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தில் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டார்.
ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு அடிக்கடி சென்று வாய்ப்பு பேட்டார். அப்போது அங்கு காஸ்டிங் மேனேஜராக வேலை செய்து வந்தவர் கணேசன். சந்திரபாபுவுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை. நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் விஷம் குடிப்பேன் என சொல்லி அங்கேயே விஷத்தை குடித்தார் சந்திரபாபு.
பதறிய கணேசன் அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தார். அந்த கணேசன்தான் பின்னாளில் ஜெமினி கணேசனாக மாறினார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் பெற்று முன்னேறினார் சந்திரபாபு. காமெடி மட்டுமில்லாமல் நடனம், பாட்டு பாடுவது என எல்லாவற்றிலும் கில்லியாக இருந்தார் சந்திரபாபு.
இவர் பாடிய எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. சொந்த வாழ்வில் செய்த சில தவறுகளாலும், மதுப்பழக்கம் மற்றும் சினிமா தயாரித்து நஷ்டப்பட்டதாலும் நொடிந்து போய் உயிரை விட்டார் சந்திரபாபு. 1958ம் வருடம் ஷீலா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் சந்திரபாபு.
ஆனால், முதல் இரவிலேயே தான் இன்னொருவரை காதலிப்பதாக சொல்ல அடுத்த நாளே தனது மனைவியை காதலுடன் சேர்த்து வைத்தார் சந்திரபாபு என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. திருமணத்திற்கு பின் 6 மாதங்கள் இருவரும் குடும்பம் நடத்தினார்கள்.
ஆனால், தனது மனைவி மகிழ்ச்சியாக இல்லை என்பதை புரிந்துகொண்ட சந்திரபாபு இதுபற்றி மனைவியிடம் கேட்டபோதுதான் அவர் வேறொருவரை காதலித்ததாகவும், அவரை மறக்க முடியாமல் தவிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
மனைவியின் காதலை புரிந்துகொண்ட சந்திரபாபு அவர் காதலித்த நபரிடமே மனைவியை விட்டு விட்டாராம். அதோடு, ‘நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ் வாழ்த்துகிறேன்’ என சொல்லி வாழ்த்திவிட்டும் வந்திருக்கிறார். அதன்பின் அவர் வேறு திருமணமும் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழிக்குப் பழி வாங்கினாரா எம்ஜிஆர்? சந்திரபாபு ஏழையாகி இறக்கக் காரணம் என்ன?