Connect with us
msv

Cinema History

எம்.எஸ்.விஸ்வநாதானின் மூக்கை உடைத்த நடிகர்!.. நடிப்பே வேண்டாம் என முடிவெடுத்த சம்பவம்..

எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் கமல், ரஜினி படங்கள் வரை இசையமைத்து மகுடம் சூடியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னால் நடிப்பிலே அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் நாடகங்களில் நடிக்க துவங்கினார். அதன் மூலம் வரும் வெற்றியைக் கொண்டு வெள்ளித்திரைக்கு சென்று விடலாம் என்கின்ற ஆசையில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி வந்திருக்கிறார்.

ஒரு முறை “ராமாயணா” என்கிற நாடகத்தில் சுயம்வர காட்சியில் வில்லை உடைக்கும் ராஜாக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைக்க, விஸ்வநாதன் அந்தக் காட்சியில் தன்னுடைய நடிப்பு அனைவராலும் ஈர்க்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்திலே பலமுறை ஒத்திகை பார்த்திருக்கிறார். அந்தக் காட்சியில் முக்கியமான பங்கு வகிக்க போவது “வில்” என தெரியபட்டதால் அதை மேடையேற்றும் முன்னரே பலமுறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

இதையும் படிங்க: சம்பளத்தை வாங்க கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் போட்ட நாடகம்!.. அட இது நல்லா இருக்கே!…

அப்படி இருக்கையில் அந்த காட்சியில் நடிப்பதற்கு மேடைக்கு வந்த எம்.எஸ்.வி. “வில்” லை கையில் எடுத்த மறுகணமே, அந்த “வில்” இரண்டாக முறிந்தது. நாடகத்தைப் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் கீழே இருந்து கிண்டலடித்தனர். ‘வில்லை உடைத்து விட்டார்.. இவருக்கே சீதையை திருமணம் செய்து விடுங்கள்’ என்று கேலியாக கூறும் அளவிற்கு அந்த காட்சி அமைந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற எம்.எஸ்.வி. திரைக்குப் பின்னால் நின்றிருந்த டி.எஸ்.பாலையாவை பார்க்க, அந்த நேரத்தில் திரை கீழிறக்கப்பட்டது. ரசிகர்களின் கூச்சல் தாங்காமல் அவர்களை அமைதிப்படுத்தி விட்டு நாடகத்தை தொடரலாம் என்கின்ற ஆசையில் இப்படி செய்திருந்தனர்.

திரை இறங்கிய மறுகணமே விஸ்வநாதனை நோக்கி பாய்ந்த பாலையா அவரை மிகக்கோபத்தோடு தாக்கியிருக்கிறார். தனது முகத்தில் ரத்தம் வரும் அளவிற்கு அடியை பெற்றுக் கொண்டு அமைதியாக இருந்தாராம் எம்.எஸ்.வி. இனி இந்த வேலையே நமக்கு வேண்டாம் என முடிவை எடுத்த அவர் தனது மூட்டை, முடிச்சுகளை கட்டிக்கொண்டு சேலத்துக்கு சென்று விட்டார்.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு பாட்டா?!.. கடுப்பேத்திய சந்திரபாபு!. வேட்டிய மடிச்சி கட்டி நடனமாடிய எம்.எஸ்.வி!..

அப்பொழுது அங்கிருந்தவர்கள் இவரை சமாதானப்படுத்தி இதெல்லாம் நடப்பது சகஜம்தான், உனது லட்சியத்தை நோக்கி செல் என இவரை உற்சாகப்படுத்த மீண்டும் வந்திருக்கிறார். நடிப்பு வேண்டாம். இசையமைக்க செல்வோம் என முடிவெடுத்தார். சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனுடன் பணியாற்ற வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

‘கோரஸ்’பாடகர்களில் ஒருவராய் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு மகாதேவனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவருக்கு வாய்ப்பளிக்க மகாதேவன் மறுக்கிறார் நீ கோரஸ் பாடகனாக மாறிவிட்டால் கடைசி வரை அந்த இடத்திலேயே இருப்பாய், உனக்குள்ளே இருக்கும் திறமை வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விடும். அதனால் நீ கோரஸ் பாட வேண்டாம் உனக்கு ஒரு வாய்ப்பினை நான் ஏற்படுத்த் தருகிறேன் என்று உறுதிகொடுத்துள்ளார். பின்னர் அவருக்கு கிடைக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மெல்லிசை மன்னர் என்கின்ற பட்டத்தோடு வலம் வந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top