Jananayagan: அரசியல் காட்சிகளை தூக்கினால் தேர்தலில் யூஸ் பண்ணுவோம்!.. தவெக முடிவு?…

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், அவரின் ஜனநாயன் திரைப்படம் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. படத்தின் ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு ‘படத்தை படம் பார்த்த அதிகாரி ஒருவர் புகார் கூறியிருக்கிறார். எனவே, மறுதணிக்கை செய்ய வேண்டும். அதற்கு மூன்று வாரம் தேவைப்படும்’ என தணிக்கைவாரியம் சொன்னது. இதையடுத்து இதை எதிர்த்து தயாரிப்பாளர் நீதிமன்றத்தை வழக்கு தொடர்ந்தார். தற்போது வழக்கு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் படம் இப்போது வரை ரிலீஸாகவில்லை.

இதை புரிந்துகொண்ட தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றார்.. அதோடு மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்திருக்கிறார். அதே நேரம் படம் எப்போது தணிக்கை அதிகாரிகளால் மறுதணிக்கை செய்யப்படும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படம் வெளியாகவில்லை என்றால் கண்டிப்பாக இந்த படம் மே மாதமே ரிலீஸாக வாய்ப்புண்டு. ஏனெனில் மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.. ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது.. எனவே இந்த இரண்டு மாதங்களிலும் படத்தை வெளியிட்டால் கல்லா கட்ட முடியாது..

ஒருபக்கம் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் தொடர்பான காட்சிகளை மறுதணிக்கையின் போது தூக்கிவிட்டால்அந்த காட்சிகளை தவெக தனது விளம்பரங்களாக பயன்படுத்தும் திட்டமும் இருக்கிறதாம். அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் எண்ணம் இருக்கிறதாம்.
ஏனெனில் தேர்தலுக்கு பின்னர் அந்த காட்சிகள் ட்ரோல் மெட்டீரியலாக மாற வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு என்கிறார்கள்..

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago