கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
TVK: விஜய் தன்னுடைய கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இதில் ஏற்கனவே கட்சி கொடி மீது பிரச்னை இருக்கும் நிலையில், தற்போது கட்சி பாடல் குறித்து புது சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் இருந்து விலகி அரசியல் களம் இறக்க இருக்கிறார். இதற்காக தன்னுடைய கட்சியை இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின் கட்சி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இதையும் படிங்க: இயக்குனராவதற்கு முன் மாரி செல்வராஜ் என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க!..
இந்நிலையில் தன்னுடைய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை முடித்துக் கொண்ட நடிகர் விஜய், கட்சியில் தன் கவனத்தை திருப்தி இருக்கிறார். அந்த வகையில் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக்கொடி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பனையூர் தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடத்தப்பட்டது. முதலில் தவெக கட்சி கொடி பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஃபெவிகால் நிறுவனத்தின் லோகோ என்றும், தமிழகத்தின் இன்னொரு கட்சியின் அடையாளம் எனும் பல விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஹிட் படத்தில் ராமராஜன் நடிக்காமல் போனதற்கான காரணம்!.. எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இவர்தான்!..
ஏற்கனவே கட்சி விழாவில் தன்னுடைய தாயை விஜய் அவமதித்தார் என சில வீடியோக்கள் வெளியானது. ஆனால் தற்போது விஜய் மற்றும் சோபா இருவரும் இணைந்து இருக்கும் காட்சிகளை அவர் அப்படி நடந்துக்கொள்ளவில்லை எனவும் விஜய் ரசிகர்கள் சில வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.