மலையாள படங்களை காலி செய்ய வரும் 2 புதிய தமிழ் படங்கள்!.. எல்லாரும் ஓரமா போங்க!..

Published on: April 20, 2024
manjummel
---Advertisement---

2024ம் வருட துவக்கம் தமிழ் சினிமாவுக்கு சரியாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வருடம் துவங்கி இதுவரையில் வெளியான எந்த தமிழ் திரைப்படமும் மெகா ஹிட் அடித்து வசூலை குவிக்கவில்லை. சினிமா உலகை பொறுத்தவரை வருடம் துவங்கும்போதே ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்தால் அந்த வருடம் நன்றாக அமையும் என்பது செண்டிமெண்ட்.

ஆனால், 2024ம் வருடம் தமிழ் சினிமாவுக்கு சரியாக அமையவில்லை. இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் கடந்த வாரம் அதாவது ஏப்ரல் 19ம் தேதி வரை வெளியான எந்த புதிய படங்களும் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தன. அதேநேரம், மலையாள சினிமா உலகுக்கு இந்த வருடம் சிறப்பாக அமைந்தது.

இதையும் படிங்க: வேட்டையன் படத்தில் ரஜினியின் புதிய பரிணாமம்… இறங்கி அடிக்கும் த.செ.ஞானவேல்…

குணா பட குகைகை மையமாக கொண்டு உருவான மஞ்சுமெல் பாய்ஸ், மம்முட்டி நடித்த பிரம்மயுகம், பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம், புதுமுகங்கள் நடிப்பில் வெளியான பிரேமலு ஆகிய 4 படங்கள் தொடர் ஹிட் அடித்தன. இதில், பிரம்மயுகத்தை தவிர மற்ற 3 படங்களும் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. இந்த 3 படங்களும் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

veera dheera

இது தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், இந்த வருடம் இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பொங்கலுக்கு வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களும் பெரிய வசூலை பெறவில்லை.

இதையும் படிங்க: ஒரு ஈ காக்கா கூட இல்ல! வெட்டிப்பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ரஜினி விஜயை மிஞ்சிய தனுஷ்

இந்நிலையில்தான், விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை அருண்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல், அறம் பட இயக்குனர் கோபிநாயனார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுசி’ திரைப்படம் முன்னோட்டமும் ரசிகர்ளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

manushi

அதற்கு காரணம் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள்தான். இந்த இரண்டு படங்களுமே நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக வெளிவரும் என நம்பப்படுகிறது. மலையாள சினிமாக்களை பார்த்து ரசித்து வரும் தமிழ் சினிமா ரசிகர்களை இந்த 2 படமும் மடைமாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.