தமிழில் நக்கீரர் வேடத்தில் நடித்த இரு பெரும் ஜாம்பவான்கள்! நீயா? நானா? போட்டியில் ஜெயித்தது யார் தெரியுமா?
Sirkazhi Govindarajan: பழம்பெரும் பாடகரான சீர்காழி கோவிந்தராஜன் நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். அகத்தியர், ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். முதலில் நாடக மேடைகளில் பாடி நடித்து வந்த சீர்காழி கோவிந்தராஜன் வெள்ளித்திரைப் பக்கம் தலை காட்டினார்.
அவர் முதலில் நடித்த படம் கந்தன் கருணை. ஆனால் அதற்கு முன்பாகவே நட்ராஜ் தரிசனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் சீர்காழி. இந்தப் படத்தை தயாரித்தவர் கவிஞர் கண்ணதாசன். இந்தப் படத்திற்கு இசையமைத்தது டி.ராமநாதன்.
இதையும் படிங்க: பப்ளிசிட்டி தேடுவதில் தலைவரும், சிஷ்யனும் ஒன்னுதான்!.. மீண்டும் ரஜினியை சீண்டும் புளுசட்ட மாறன்….
ஆனால் முன்பு ஒரு பேட்டியில் சீர்காழி கோவிந்தராஜன் ‘எனக்கு நடிப்பிலே ஆர்வம் கிடையாது. ஆனாலும் அதையும் மீறி நடித்திருக்கிறேன் என்றால் கண்ணதாசனுக்காகவும் இசையமைப்பாளர் ராம நாதனுக்காகவும் தான்.
அதுமட்டுமில்லாமல் என் கல்யாணத்திற்கு பெரும் வகையில் உதவி செய்திருக்கிறார் கண்ணதாசன்’ என தான் நடித்ததன் நோக்கத்தை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன்.
இதையும் படிங்க: 55 கோடிலாம் யாருக்கு வேணும்? இன்னும் பல கோடிகளில் புரள நெல்சன் கையாளும் உத்தி – அப்போ ‘ஜெய்லர்2’?
ஆனால் கண்ணதாசனுக்காக நடிக்க வந்து அந்த படம் முழுமை பெற்றதா என்றால் இல்லை. 8000அடி வரை வந்து அந்தப் படம் பாதியிலேயே நின்று போனதாம். அதன் பிறகு தான் கந்தன் கருணை படத்தில் நடித்தார். அவர் முதலில் நடித்தது கண்ணதாசன் படம் என்றாலும் நடித்து வெளியான முதல் படம் கந்தன் கருணை.
ஆனாலும் கந்தன் கருணை திரைப்படத்திலும் நடிக்க சீர்காழி அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளவில்லையாம். ஏனெனில் இந்தப் படத்திற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் நக்கீரர் கதாபாத்திரம்.
இதையும் படிங்க: கோடி கோடியா கொடுத்து ஏன் கஷ்டப்படுறீங்க? சம்பளத்தில் இப்படி ஒரு ஆஃபரா? தனிக்காட்டு ராஜாவா ஜேக்கி
திருவிளையாடல் படத்தில் நக்கீரராக நடித்த ஏ.பி. நாகராஜன் தான் கந்தன் கருணை படத்தையும் எடுத்தார். அதனால் சீர்காழி நாகராஜனிடம் ‘திருவிளையாடல் படத்தில் நக்கீரனாக நீங்கள் நடித்து அசத்தியுள்ளீர்கள்.அப்படி இருக்கும் போது அந்த வேடத்தில் நான் நடிப்பதா’ என சீர்காழி கேட்டாராம்.
அதற்கு நாகராஜன் ‘திருவிளையாடல் படத்தில் இருக்கும் நக்கீரர் பேசுகிற நக்கீரர். ஆனால் கந்தன் கருணை படத்தில் இருக்கும் நக்கீரர் பாடுகிற நக்கீரர். அதனால் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும் ’ என்று கூறி சீர்காழியை நடிக்க சம்மதிக்க வைத்தாராம் ஏ.பி, நாகராஜன்.