விஜயகாந்தின் காதலுக்கு வில்லன்களாக இருந்த அந்த பிரபலங்கள்!.. நடிகையை பிரிந்ததே இதனால் தானாம்!..
தமிழ் சினிமாவில் கேப்டனாக ஒரு நல்ல நடிகராக விஜயகாந்த் இருக்கிறார் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் அவருடைய நெருங்கி நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் தான். வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்தை நடித்தால் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விஜயகாந்திடம் புகுத்தியவர் இவர் தான்.
மேலும் முரட்டுக் காளை படத்தில் கூட வில்லனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கிய விஜயகாந்திடம் உன்னை எவ்வளவு பெரிய ஆளாக்க போறேன், நீ என்னன்னா வில்லனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருக்க என கோபப்பட்டார் இப்ராஹிம் ராவுத்தர். அந்த அளவுக்கு விஜயகாந்திடம் புரிதலும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.
இதையும் படிங்க : மனைவி மீது உள்ள காண்டை டப்பிங்கில் காட்டிய எம்.எஸ்.பாஸ்கர்.. அதுக்குனு இவ்வளோ ஓபனாவா பேசுறது
இவரை போலவே விஜயகாந்த் நலனில் அதிக அக்கறை கொண்டவராக இருந்தவர் தயாரிப்பாளர் லியாகத் அலி. புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் லியாகத் அலி. இவரும் விஜயகாந்த் மீது அதிக அளவு அக்கறை கொண்டவராக இருந்தனர். ஆனால் இருவருமே இப்பொழுது விஜயகாந்தை விட்டு பிரிந்து இருக்கின்றனர்.
அதற்கு சில பல காரணங்கள் இருந்தாலும் விஜயகாந்தின் காதலுக்கு வில்லன்களாக இருந்தவர்களே இவர்கள் இருவர் தானாம். இதை லியாகத் அலியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். விஜயகாந்த் பிஸியான நேரத்தில் ஒரு நடிகையை தீவிரமாக காதலித்து வந்தாராம். அதுவும் அந்த நடிகையின் பெயர் ‘ரா’ என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்குமாம். இதையும் லியாகத் அலிதான் கூறினார்.
இதையும் படிங்க :விஜயிற்கு மிகவும் பிடித்த உணவு என்ன தெரியுமா? இதனால் வீட்டில் எப்போதும் இது ரெடியா இருக்குமாம்… சங்கீதா பகிர்ந்த சீக்ரெட்
அந்த நடிகை விஜயகாந்த் மீது அதிக அளவு காதலில் இருந்தாராம். ஒரு நேரத்தில் இருவரும் திருமணம் வரை சென்று விட்டனராம். ஆனால் இந்த நேரத்தில் இப்படி செய்தால் சரிவராது என்று கூடுதலாக சில பொய்களையும் சொல்லி அந்த நடிகையிடம் விஜயகாந்தை வைத்து நாம் பிரிந்து விடுவோம் என்று ராவுத்தரும் லியாகத்தும் சொல்ல வைத்திருக்கின்றனர்.
நண்பர்கள் சொல்வதை மீறாத விஜயகாந்தும் அந்த நடிகையிடம் கூறி இருவரும் பிரிந்து விட்டனராம். இதுவரை அவர்கள் காதலை பிரித்தது நாங்கள் தான் என்று அந்த நடிகைக்கு தெரியாது. விஜயகாந்தே யோசித்து எடுத்த முடிவு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சந்திப்பில் கூட நான் அந்த நடிகையை பார்த்து தயங்கி தயங்கி நின்றேன். அவரே என் பக்கத்தில் வந்து நீங்கள் ஏன் தயங்கி இருக்கிறீர்கள், விஜி தான் அப்படி செய்து விட்டார், அதற்கு நீங்கள் என்ன பண்ண முடியும் என்று தான் கேட்டார் என்று லியாகத் அலி கூறினார்.