மீண்டும் நடிகராகும் உதயநிதி ஸ்டாலின்?... மாமன்னன் செய்த சாதனையால் இப்படியா?..
தற்போது தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சராக திகழ்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன் “மாமன்னன்”தான் தான் நடிக்கும் கடைசி திரைப்படம் என கூறியிருந்தார். எனினும் “மாமன்னன்” திரைப்படத்திற்கு முன்பு உதயநிதி நடித்த “கண்ணை நம்பாதே”, “ஏஞ்சல்” ஆகிய திரைப்படங்கள் வெளியாக தயாராக உள்ளன.
மாமன்னன் செய்த சாதனை
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு சக்திவேல் தனது வலைப்பேச்சு வீடியோவில் “மாமன்னன்” திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தைத்தான் கடைசி படம் என சொன்னார். ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் ஒரு செய்தியை பார்த்தால் உதயநிதிக்கு மீண்டும் நடிப்பதற்கான ஆசை வந்தாலும் வரலாம்.
ஏனென்றால் அவருடைய மாமன்னன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 23 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம். உதயநிதி நடித்ததிலேயே அதிக பணத்திற்கு டிஜிட்டல் உரிமம் வாங்கப்பட்டது இந்த படத்திற்குத்தான்” என அதில் கூறியிருக்கிறார்.
மாமன்னன்
“மாமன்னன்” திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆள விடுங்க சாமி- பாரதிராஜா படத்தில் இருந்து நடு ராத்திரியில் தப்பி ஓட நினைத்த ராதிகா… என்ன காரணம் தெரியுமா?