Cinema History
உதயநிதி மிஸ் பண்ண சூப்பர்ஹிட் படம்… இயக்குனருக்காக மட்டுமே ஓகே சொன்ன கலகத் தலைவன்..!
Udhayanithi stalin: தமிழ் சினிமாவில் விநோகிஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறி பின்னர் நடிகராகி ஹிட் கொடுத்த ஒரே ஆள் என்றால் அது உதயநிதி ஸ்டாலின் மட்டுமே. ஆனால் அவர் தன்னிடம் வந்த ஒரு சூப்பர்ஹிட் படத்தினை மிஸ் செய்து விட்டாராம்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதியின் தயாரித்த முதல் படம் குருவி. ஆனால் இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து சூர்யாவின் ஆதவன், கமலின் மன்மதன் அம்பு ஆகிய படங்களை தயாரித்தார். இந்த படத்திலும் சரியாக வசூல் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: லியோ இத்தனை கோடி வசூல்னு நல்லா வடை சுடுறீங்க!.. புள்ளிவிபரத்தோடு புட்டு வைக்கும் புள்ளிங்கோ!…
ஏ.ஆர்.முருகதாஸின் 7ஆம் அறிவு திரைப்படத்தினை தயாரித்தார். அதில் அவருக்கு வசூல் நன்றாகவே இருந்தது. இப்படங்களை விட 2010ம் ஆண்டு வெளியான கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா, ஏ.எல்.விஜய்யின் மதராசப்பட்டினம், ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கிரன், மற்றும் பிரபு சாலமனின் மைனா படத்தின் விநியோக உரிமையை பெற்றார். அனைத்துமே ஹிட் வரிசை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவரின் முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அப்படத்திற்காக பிலிம்பேர் விருதை கூட பெற்றார். இதை தொடர்ந்து கமர்சியல் நாயகனாக நிறைய படங்களில் நடித்தார்.
தற்போது அமைச்சராகி விட்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. வடிவேலுவை இதுவரை யாரும் பார்த்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..
அப்படத்துக்கு முன்னர் கலகத்தலைவன் படத்தில் நடித்தார். இப்படத்தினை உதயநிதி தான் தயாரித்தார். மகிழ் திருமேனி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தினை ஓகே செய்ததற்கு பின்னர் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறதாம்.
முதலில் மகிழ்திருமேனி தன்னுடைய தடம் கதையை எழுதி விட்டு உதயநிதியிடம் தான் கதை சொல்லி இருக்கிறார். உதயநிதிக்கு கதை பிடித்து விட படம் செய்யலாம் என யோசித்து கொண்டு இருந்த நிலையில் ஒரு சில பிரச்னைகளால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதற்காகவே கலக தலைவனில் நடிக்க ஓகே சொன்னார் என்று கூறப்படுகிறது.