மியூசிக் கான்சர்ட் வந்ததே அதுக்கு தான்.. ரசிகர்களிடம் அத்துமீறிய பிரபல பாடகர்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

by Akhilan |   ( Updated:2024-02-12 10:12:45  )
மியூசிக் கான்சர்ட் வந்ததே அதுக்கு தான்.. ரசிகர்களிடம் அத்துமீறிய பிரபல பாடகர்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…
X

Aditya Narayanan: சமீபத்திய நாட்களில் ரசிகர்கள் லைவ் கான்சர்ட் போய் பிரச்னையை மட்டுமே தொடர்ந்து சந்தித்து வருவதால் சர்ச்சைகளும் அதிகரித்து வருகிறது. அந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்து இருக்கிறார் உதித் நாராயணனின் மகன் ஆதித்யா. இதுகுறித்து அதிர்ச்சியான சில தகவலும் வெளியாகி இருக்கிறது.

இசையை பிடிக்காத ரசிகர்கள் எப்படி இருக்க முடியும்? அதிலும் தற்போதெல்லாம் ரசிகர்கள் லைவ் மியூசிக்கிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்த வகையில் நிறைய கான்சர்ட் இப்போது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த கலாச்சாரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: அப்படியே நகராம நில்லு நல்லா பாத்துக்குறோம்!. ஸ்லீவ்லெஸ் உடையில் மனசை கெடுக்கும் ஆண்ட்ரியா…

கடந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி பலரை மறக்க விடாமல் செய்தது. பெரிய சர்ச்சையை சந்தித்தது. ஒரு கட்டத்தில் ரஹ்மானே டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு அந்த கட்டணத்தினை திருப்பி கொடுக்கும் நிலை உருவானது.

இதையும் படிங்க: பளார்னு ஒரு அறைவிட்டார்!.. அதிலிருந்தே நான் ‘தல’க்கு தங்கச்சியா மாறிட்டேன்!.. நடிகை சொல்றதை கேளுங்க!..

இப்படி இசை கச்சேரிகளால் உருவாகும் தொடர் சர்ச்சையில் ஆதித்யா நாராயணனும் இணைந்து இருக்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த இசை கச்சேரியில் டான் பாடலை மேடையில் பாடிக்கொண்டு இருந்த ஆதித்யா திடீரென ரசிகர்களின் கையில் அடித்து போனை பிடுங்கி கூட்டத்தில் வீசி எறிகிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இதுவரை அவர் எதற்காக இப்படி செய்தார் என்ற விளக்கம் அவர் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. தமிழில் சரிகமப 2023, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 2023ல் நடுவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய பாடகரான உதித் நாராயணனின் மகன் ஆதித்யா இப்படி நடந்து கொண்டது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story