உலகநாயகன் கமல் நடிப்பில் மட்டுமல்ல பாடுவதிலும் கில்லி தான்... அவரின் டாப் 5 பாடல்கள்...
நடிப்பு முதல் இயக்கம் வரை எல்லா துறைகளிலும் கால் பதித்து இருக்கும் கமல் நிறைய படங்களில் பாடலும் பாடி இருக்கிறார். அப்படி அவர் குரலில் ஹிட் அடித்த பாடல்களை தெரிந்து கொள்வோமா..
அவள் அப்படித்தான்:
முதல்முறையாக கமல் குரலில் வெளியான முதல் படம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். பன்னீர் புஷ்பங்களே எனத் தொடங்கும் இப்பாடலை கமல் பாடி இருந்தார்.
சிகப்பு ரோஜாக்கள்:
கமலின் நடிப்பில் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தின் கதையால் படம் வசூலில் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திலும் இளையராஜா இசையில் கமல் நினைவோ ஒரு பறவை எனத் துவங்கும் பாடலை எழுதி இருந்தார். இப்பாடலின் வரிகளை கவிஞர் வாலி எழுதி இருந்தார்.
சரணம் ஐய்யப்பா:
அவருக்கு மட்டுமே பாடி வந்த கமல் முதல்முறையாக பிற நடிகர்களுக்கு பாட துவங்கினார். அப்படி அவர் பாடிய முதல் பாடல் அண்ணா வாடா தம்பி வாடா எனத் துவங்கும். இப்பாடலுக்கு சந்திரபோஸ் இசையமைத்து இருந்தார்.
சவால்:
முதல்முறையாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கமல் பாடிய முதல் பாடல். சவால் படத்தில் குடித்து விட்டு பாடுவது போல அமைந்து இருக்கும். தண்ணியப்போட்ட சந்தோஷம் பிறக்கும் எனத் துவங்கும் இப்பாடல் இப்போது கூட சிலரின் ப்ளேலிஸ்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமலை பார்த்து கமல் எங்கே? என்று கேட்ட நடிகர்… பங்கமாய் கலாய்த்த உலகநாயகன்…. தரமான சம்பவம்…
மூன்றாம் பிறை:
கமலின் சூப்பர்ஹிட் பட வரிசையில் முக்கிய இடம் மூன்றாம் பிறைக்கு தான். ஸ்ரீதேவியுடன் அவர் நடிப்பு இன்னமும் பலரால் பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். முன்னொரு காலத்தில முருங்க மர காட்டுக்குள்ள எனத் துவங்கும் பாடல் கதை சொல்வது போல அமைந்திருக்கும்.