சிவாஜியை விட அதிகமாக சம்பளம் கேட்ட சந்திரபாபு...! உள்ளத்தை அள்ளித்தா இந்தப் படத்தோட காப்பியா...?

Ullathai Alli Thaa
நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் 1996ல் வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. படம் முழுக்க சிறிதும் போரடிக்காத வகையில் நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன.
கார்த்திக், கவுண்டமணி காம்பினேஷனில் படம் முழுக்க செம கலாய் காமெடி தான். இந்தப்படம் பழைய படம் ஒன்றின் காப்பி என்றால் நம்ப முடிகிறதா? அது என்ன படம் என்று பார்க்கலாமா...
ஒரு நடிகன் என்றால் இவரைப் போல் நடிக்க ஆளே கிடையாது என்று சொல்லும் அளவில் இருக்க வேண்டும். அதற்கு சிவாஜி போன்ற சில நடிகர்களைச் சொல்லலாம்.
அவர்களில் ஒருவர் ஜே.பி.சந்திரபாபு. இவர் 1947ல் அமராவதி படத்தில் அறிமுகம். முதல் படத்திலேயே ஜோரா நடித்திருப்பார். சபாஷ் மீனா படத்தில் அவரது நடிப்பு செம மாஸாக இருக்கும்.

Sabash Meena
படத்தின் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, ப.நீலகண்டன் ஆகியோர் முதலில் கதையை சிவாஜியிடம் தான் சொன்னார். கதையைக் கேட்டதும் சிவாஜி படத்தில் ஹீரோவுக்கு இணையான நகைச்சுவை வேடத்திற்கு சந்திரபாபுவைப் போடுங்கள் என்றார்.
அவர்கள் இருவரும் சந்திரபாபுவை சந்தித்து சிவாஜி சொன்ன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கேட்டு சிவாஜி ஒரு சிறந்த நடிகர் அதனால் தான் என்னை சிபாரிசு செய்துள்ளார் என்றார். அதன்பிறகு கதையைக் கேட்டு சம்மதம் தெரிவித்தார். அப்புறம் ஒரு கண்டிஷனும் போட்டார்.
சிவாஜியை விட ஒரு ரூபாயாவது எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஏன்னா எனக்குத் தான் வேலை அதிகம்..என்றும் காரணம் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். சிவாஜியிடம் இதுபற்றி கூற சந்திரபாபு சொன்னதை எல்லாம் பெரிசு படுத்தாதீங்க.
அவன் அப்படித்தான். ஆனா அந்தக் கேரக்டரை பாபு நடிச்சாத் தான் நிக்கும். அதனால அவன் கேக்குறதைக் கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டார். அதன்படியே சந்திரபாபுவை ஒப்பந்தம் செய்தனர். படம் வெளியானதும் சக்கை போடு போட்டது.
இந்தப் படத்தில் ரிக்சாக்காரன் கதாபாத்திரத்தில் அவர் பேசும் சென்னைத்தமிழ் ரொம்பவே ப்ரஷ்ஷாக இருக்கும். வேறு யாராலும் அப்படி பேச முடியாது. நடிக்கவும் முடியாது. இந்தப் படத்தைக் காப்பி அடித்துத் தான் நவரச நாயகன் கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் எடுக்கப்பட்டது.

Chandrababu
இன்னும் சொல்லப்போனால் பிரபுதேவாவின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளுக்கு சந்திரபாபு தான் காரணம். கவலையில்லாத மனிதன் படத்தில் பிறக்கும்போதும் அழுகின்றாய், குமார ராஜா படத்தில் ஒண்ணுமே புரியல உலகத்திலே, சகோதரி படத்தில் நான் ஒரு முட்டாளுங்க.., அன்னை படத்தில் புத்தியுள்ள மனிதரெல்லாம், போலீஸ்காரன் மகள் படத்தில் பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது,
புதையல் படத்தில் உனக்காக எல்லாம் உனக்காக, ஆண்டவன் கட்டளை படத்தில் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் என சந்திரபாபுவுக்கு என்றே தமிழ்த்திரை உலகம் சிவப்புக் கம்பளம் வரவேற்பு கொடுத்தது. கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி படத்தில் ஜாலி லைஃப் என்று இவர் சிவாஜிக்காகப் பாடியுள்ளார்.