கீர்த்தி சுரேஷுக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்த விஜய்?!.. பிரபல விமர்சகர் கருத்தால் சர்ச்சை!...
திரையுலகில் ஒரு நடிகரை மற்றொரு நடிகையோடு சம்பந்தப்படுத்தி பேசுவது என்பது கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடந்து வருகிறது. அதில் பலவும் உண்மையாகவும் இருப்பதுண்டு. திருமணமான ஒரு நடிகர் ஒரு நடிகையிடம் தொடர்பு வைப்பது, இதனால் அவரின் மனைவி அவரை பிரிந்து செல்வது என்பதும் பல வருடங்களாக திரையுலகில் நடக்கும் ஒரு நிகழ்வுதான்.
கடந்த சில மாதங்களாக ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயும் இந்த வதந்தியில் சிக்கியுள்ளார். அவருக்கும் நடிகர் கீர்த்தி சுரேஷுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் அவரின் மனைவி சங்கிதா கோபித்துக்கொண்டு லண்டன் சென்று அவரின் பெற்றோருடன் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.
அதேபோல், விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சய் வீட்டின் மேலேயே கீர்த்தி சுரேஷ் தங்கியிருப்பதாக கூறி புகைப்படங்களையெல்லாம் வெளியிட்டனர். இதையடுத்து, இதற்கு மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷ் தரப்பு, கீர்த்தி தனது பள்ளி தோழரை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் அவருடன் திருமணம் நடக்கும் எனவும் தெரிவித்தது. ஆனால், விஜய் தரப்பிலிருந்து எந்த செய்தியும் பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.
இந்நிலையில், பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் திரை பிரபலங்களை பற்றி சர்ச்சையான மற்றும் பரபரப்பான கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் கூறிவரும் உமைர் சாந்து ‘கீர்த்தி சுரேஷுக்கும், விஜய்க்கும் ரகசிய உறவு இருக்கிறது. விஜய் சமீபத்தில் சொகுசு காரையும், பரிசு பொருட்களையும் கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்துள்ளார். இது அவரின் மனைவிக்கும் தெரியும். ஆனாலும், அவர் இதை கண்டு கொள்ளவில்லை’ என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘வாலி’க்கு அப்புறம் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் கூட்டணி வைத்த அஜித்!.. எந்தப் படம் தெரியுமா?..