Connect with us
leo

Cinema News

மறுபடியும் கழுகா?.. லியோ க்ளிம்ஸ் வீடியோவில் ஒளிந்திருக்கும் குறியீடு.. இதையெல்லாம் கவனிச்சீங்களா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கின்றனர். எந்த பக்கம் திரும்பினாலும், லியோ படம் குறித்து தான் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

லியோ படத்தில் நடித்த நடிகர்களை எங்கு பார்த்தாலும், இந்த படம் பற்றி தான் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த அளவிற்கு பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென லியோ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியானது. பொதுவாக டீசர், போஸ்டர் என எது வெளியிடுவதாக இருந்தாலும், ட்விட்டரில் அறிவிப்பு வெளியாகும், அல்லது அந்த விஷயம் கசிந்து தகவல்களாவது பரவிவிடும்.

vijay

ஆனால் இந்த க்ளிம்ஸ் வீடியோவை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இதனை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். நேற்று சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பதால், இந்த வீடியோவில் சஞ்சய் தத்தின் கதாப்பாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். லியோ படத்தில் சஞ்சய் தத்தின் பெயர் ஆண்டனி தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் அவரின் கெட்டப் பார்க்கவே மிகவும் மாஸாக இருக்கிறது.

முறுக்கு மீசை மற்றும் தாடியுடன் சிகரெட்டை பிடித்துக்கொண்டு ஸ்டைலாக இருக்கிறார் சஞ்சய் தத். பின்னணி இசையும், அவரின் தோற்றமும் மிரளவைக்கும் படி உள்ளது. இவர் தான் இந்த படத்தின் வில்லன் என்ற தகவல் பரவி வருகிறது. இந்தநிலையில் இந்த க்ளிம்ஸ் வீடியோவில் இருக்கும் குறியீடுகள் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

sanjay

அந்த க்ளிம்ஸ் வீடியோவின் தொடக்கத்தில், ஒரு கழுகை தான் காட்டுகிறார்கள். ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா முடிந்ததில் இருந்தே, நேற்று முழுவதும், கழுகு காக்கா கதை தான் ஹாட் டாப்பிக். இந்த வீடியோவிலும் கழுகு உள்ளது. மேலும் 2 கேங்ஸ்டர் கும்பல் சந்தித்துக்கொள்ளும் இடம் போன்ற காட்சி உள்ளது. அதன் பிறகு சென்னையில் செட் போட்டு எடுத்த ஷாட், மற்றும் காஷ்மீரில் எடுத்த ஷாட்டை கலந்து ஒரு குட்டி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் வருமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. விக்ரம் படத்திலும் கழுகு வரும், இந்த படத்திலும் கழுகை காட்டுகிறார்கள். இதற்கு முன்னர் வெளியான நா ரெடி தான் பாடலில் தாஸ் என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். இந்த படத்தில் சஞ்சய் தத்தின் பெயர் ஆண்டனி தாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் பெயரிலும் தாஸ் வருமா? இருவருக்கும் என்ன தொடர்பு என்பதும் தெரியவில்லை என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜுக்கு படத்தை எப்படி சரியாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. படத்தை பற்றி மக்களை பேச வைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு பெரிய படத்தை மிக பெரிய படமாக மாற்றும் வித்தை தெரிந்தவர் லோகேஷ் கனகராஜ் என்று அந்த பேட்டியில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க- சரிதாவுக்கு நாலு புருஷன்!. அடுத்த பட வாய்ப்புக்கு அடிபோடுறார்.. கோபத்தில் வெடித்த பயில்வான் ரங்கநாதன்

google news
Continue Reading

More in Cinema News

To Top