Connect with us

Cinema History

மணிரத்னம் முதல் மனோபாலா வரை!.. கோலிவுட்டின் முன்னணி பிரபலங்களை தூக்கிவிட்ட இசைஞானி…

Ilayaraja: பொதுவாகவே இசைஞானி இளையராஜா எல்லா விஷயத்துக்குமே தர்க்கம் செய்வார் என்றும்,  கோபக்காரர், அகங்காரம் கொண்டவர் எனவும் அதிக  நெகட்டிவ் விமர்சனங்களே அவர் மீது உள்ளது.  ஆனால் உண்மையான சினிமா அறிவுடன் அவரிடம் வருபவர்களுக்கு அவர் செய்யும் உதவிகள் பலருக்கு தெரிவதே இல்லை.

ரோஜா திரைப்படத்தில் மணிரத்னத்திற்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட சண்டையால்தான் ஏ ஆர் ரகுமானை அறிமுகம் செய்து வைத்தார் என்ற ஒரு செய்தி பலருக்கும் தெரியும்.  ஆனால் மணிரத்னத்தை வளர்த்ததே இளையராஜா தான் என்பது இன்னமும் பலருக்கு தெரியாத செய்தியாகவே இருக்கிறது.  இதை மணிரத்னம் இதுவரை எந்த மேடையிலும் சொல்லவில்லை.

இதையும் படிங்க: பாலசந்தருக்கு ரஜினி கமல் செய்யாததை நான் செஞ்சிருக்கேன்! வாழ்நாள் பாக்கியமாக கருதிய நடிகர்

 ஆனால் இளையராஜா அளித்த ஒரு பேட்டியில் இதுகுறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார்.  எனக்கு மணிரத்னத்தை பாலு மகேந்திரா தான் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் முதல் படம் கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி.  மணிரத்னத்திற்கு அவரிடம் இருந்த திறமைக்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டு வேலை செய்திருக்கிறார் இளையராஜா.

முதல் படம் வெளியானால் கூட மணிரத்னத்திற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரவே இல்லை.  ஆனால் இளையராஜா அவராகவே தனக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களிடம் மணிரத்னத்தை அழைத்து பேசுங்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தாராம்.  அப்படி மணிரத்னத்திற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு உனரோ என்ற மலையாளத் திரைப்படம். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர்  இளையராஜாவிடம் வந்து என்னால்  நீங்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க இயலாது என சொல்லி இருக்கிறார்..

ஆனாலும் மணிரத்னத்திற்காக அவரின் திறமை வளர வேண்டும் என்பதற்காக இளையராஜா அங்கும் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம்.  இது மட்டுமல்ல இயக்குனர் மனோபாலாவிற்கும் அந்த சமயத்தில் அப்போது அறிமுக இயக்குனர்கள் அனைவருக்கும் இளையராஜா எந்தவித பணமும் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: பாரதி கண்ணம்மா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர்தான்!.. பல வருடங்கள் கழித்து சேரன் சொன்ன தகவல்..

அது மட்டுமல்லாமல், சந்தான பாரதியும், பி. வாசுவும் இணைந்து இயக்கிய திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள்.  இப்படத்திலும் இளையராஜா இசை அமைத்தால் படத்தின் ரீச் அதிகமாக இருக்கும் என நினைத்த இயக்குனர்கள் நேராக இளையராஜாவை சென்று சந்தித்திருக்கின்றனர்.  அவர் கதையை முழுமையாக கேட்டு முடித்து இருக்கிறார்.

உடனே படத்திற்கான மியூசிக்கை தொடங்கி  எல்லா பாடல்களையும் இசையமைத்து முடிக்கும் வரை  தனது சம்பளத்தை சொல்லாமல் இருந்திருக்கிறார் இளையராஜா.  அப்போது அவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் ஒரு லட்சத்திற்கும் அதிகம்.  ஆனால் அப்படத்திற்கு ஆன மொத்த செலவே 5 லட்சத்திற்குள் தானாம். இதனால் பி வாசுவுக்கு நெருடல் இருந்து கொண்டே இருந்ததாம். 

கிட்டத்தட்ட பயந்து போய் கடைசி கட்ட இசையமைப்பு பணியில் இளையராஜாவிடம் உங்கள் சம்பளம் எவ்வளவு என சொல்லி விடுங்கள். கொஞ்சம் பயமாக இருக்கிறது என பி வாசு கேட்டாராம்.  ஃப்ரீ என்ற வார்த்தையுடன் முடித்துக் கொண்டாராம்.  இளையராஜாவை பற்றி அதிகம் அவதூறு செய்திகளை பரப்பி வரும் நிலையில்  யாருக்கும் தெரியாமல் அவர் திரைத்துறையில் இத்தனை கலைஞர்களை வளர்த்து விட்டிருக்கிறாய் என்பது ஆச்சரியமான செய்தியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: கவுன்சிலருடன் ஒரு போட்டோக்கே யோசித்த திரிஷா… கூவத்தூர் சம்பவத்துக்கு இந்த லாஜிக் சரியாக இருக்கே?

google news
Continue Reading

More in Cinema History

To Top