ஏற்கனவே விட்டு வருத்தப்படுறோம்! தங்கலானையும் விட்டுராதீங்கலே.. என்ன மேட்டர் தெரியுமா?
Thangalan: விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் தங்கலான். கேஜிஎஃபில் நடக்கும் ஒரு உண்மை கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.
உண்மையான கேஜிஎஃப் பட கதையே இதுதான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. ஏனெனில் அந்த அளவுக்கு படத்தில் விக்ரமின் நடிப்பும் அவருடைய கெட்டப்பும் கதையைத் தாண்டி ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. தங்கலான் திரைப்படத்திற்காக விக்ரம் எந்த அளவு தன்னை வருத்தி இருக்கிறார் என்பது படத்தைப் பார்த்த அனைவரும் கூறி ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: சுனைனா மீது அவ்ளோ ஆசை!.. காண்டம் வாங்கிட்டு வர சொன்னாரு நகுல்!.. இயக்குனர் பகீர் பேட்டி!…
இன்னொரு பிளஸ் ஆக படத்திற்கு இருப்பது ஜீவி பிரகாஷ் இசையில் அமைந்த பாடல்களும் அவருடைய இசையும் தான். கண்டிப்பாக படத்திற்கு ஆஸ்கார் விருது உறுதி. அது ஜிவி பிரகாஷுக்கு கூட இருக்கலாம் அல்லது விக்ரமுக்கு கூட இருக்கலாம் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதுவரை எந்த ஒரு எதிர்மறையான விமர்சனமும் வெளியாகாத பட்சத்தில் பல பேர் தங்கலான் திரைப்படத்திற்கு ஆதரவுகளை திரட்டி வருகிறார்கள். அதில் ஒரு சில ரசிகர்கள் ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை அப்பொழுது கொண்டாடாமல் இப்பொழுது அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: நீ நடிக்கலாம் வேண்டாம்… ஆனா இதை மட்டும் செஞ்சிருப்பா.. பிரபுவிடம் ஆசையாக கேட்ட சிவாஜி!..
அதனால் அதே தவறை தங்கலான் திரைப்படத்திற்கும் செய்யாதீர்கள் .கண்டிப்பாக அனைவரும் இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். எந்த ஒரு எதிர்மறையான விமர்சனத்தையும் நம்பாதீர்கள் என சோசியல் மீடியாவில் படத்திற்கு ஆதரவுகளை திரட்டி வருகிறார்கள்.
ஆனால் படம் ஒரு டாக்குமென்டரி போல இருப்பதாகவும் ஆங்காங்கே லைவ் சவுண்ட் பயன்படுத்தி இருப்பதால் டயலாக் கேட்பதில் கொஞ்சம் சிரமம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அதை எல்லாம் விக்ரமின் நடிப்பு மறைத்து விடுகிறது. கேஜிஎஃபில் அந்த பழங்குடி மக்கள் படும் பாடு, கஷ்டம் என அனைத்தையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் படத்தில் நடித்த கலைஞர்கள். விக்ரம் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களை மிகவும் வருத்தி நடித்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு வேளை இருக்குமோ? அஜித்துடன் செட்டில் எஸ்.ஜே. சூர்யா.. வைரலாகும் புகைப்படம்