latest news

மீண்டும் விண்டேஜ் விஜய்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் என்னைத் தாலாட்டும் முழு வீடியோ பாடல்!

விஜய், லைலா நடிப்பில் வெளிவர இருந்த படம் உன்னை நினைத்து. ஆனால் இரண்டு பாடலகள் எடுத்த நிலையில் அப்படத்திலிருந்து விஜய் விலகினார்

கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘உன்னை நினைத்து’. சூர்யா, லைலா, சினேகா நடிப்பில் வெளியான இந்த படம் சூர்யாவை க்பெண்கள் மத்தியில் கொண்டு சென்றது. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லை. முத்லில் விஜய் , லைலா ஒப்பந்தம் ஆனார்கள் என்பது நமக்கு தெரிந்ததே. இந்த படத்திற்காக விஜய் சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அப்போது விஜய் மற்றும் லைலா சம்பந்தப்பட்ட ‘என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா’ என்ற பாடல் முழுமையாகப் படமாக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே விஜய்க்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லையாம். விக்ரமன் விருப்பத்திற்காக ஒப்புக்கொண்டாராம். ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் அந்தப் படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார். அவருக்குப் பதிலாக சூர்யா அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமானார். பின்னர் அதே பாடலில் சூர்யா நடிக்க படமாக்கப்பட்டது. சிற்பி இசையில் வெளியான அந்த பாடல் இன்று வரை பலராலும் ரசிக்கப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த அந்த ஒரிஜினல் வெர்ஷனின் சில நொடிக் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. தற்கு முகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து அந்தப் பாடலின் முழு வீடியோவை தற்போது வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விஜய் – லைலா காம்போவில் எடுக்கப்பட்ட ‘என்னைத் தாலாட்டும்’ பாடலின் முழு வீடியோ வரும் மார்ச் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago