இனிமே இவங்கதான்!.. மாஸ் கிளப்ப போகும் 5 இளம் நடிகர்கள்!.. அடுத்த தனுஷாக மாறும் லவ்டுடே பிரதீப்!..

திரையுலகில் எப்போதும் இளம் நடிகர்களின் வரவு வந்துகொண்டேதான் இருக்கும். இளம் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் சீனியர் நடிகர்களாக மாறுவார்கள். அதன்பின் வேறு இளம் நடிகர்கள் வருவார்கள். இது ஒரு சுழற்சி. தொடர்ந்து கொண்டே இருக்கும். அதேபோல், நடிக்க வரும் எல்லா இளம் நடிகர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க மாட்டார்கள்.
அந்த வகையில், அடுத்த தலைமுறையில் நம்பிக்கை கொடுக்கும் முக்கிய 5 இளம் நடிகர்கள் பற்றி பார்க்கலாம். இதில் 5வது இடத்தில் இருப்பது ஹரிஸ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான பார்க்கிங் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் இவரின் அடுத்தடுத்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும், தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என நம்பலாம்.
4வது இடத்தில் இருப்பது நடிகர் மணிகண்டன், ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்தவர் குட் நைட், லவ்வர் என அதிரடி ஆட்டம் ஆடினார். ஹீரோயிசம் இல்லாத கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை கொடுத்து வரும் இளம் நடிகராக மாறி இருக்கிறார் மணிகண்டன். வரும் வருடங்களில் இன்னும் மேலே போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
3வது இடத்தில் இருப்பது பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை இயக்கி ஹிட் கொடுத்த பிரதிப் அடுத்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். அந்த படமும் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்போது விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்.ஐ.சி என்கிற படத்திலும், டிராகன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு தனுஷ் என்கிற பெயரை இவரே பிடிப்பார் என சொல்லப்படுகிறது.
2வது இடத்தில் இருப்பது அசோக் செல்வன். ஓ மை கடவுளே பட ஹிட்டுக்கு பின் இவர் நடிப்பில் வெளியான போர்த்தொழில் படமும் நல்ல வசூலை பெற்றது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும் வரும் இளம் நடிகராக மிளிர்ந்து வருகிறார் அசோக் செல்வன். இவர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியை திருமணமும் செய்து கொண்டார்.

ashok selvan
முதலிடத்தில் இருப்பது கவின். சீரியலில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர் இவர். லிஃப்ட், டாடா ஆகிய படங்கள் வெற்றியை பெற்றது. சமீபத்தில் வெளியான ஸ்டார் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இப்போது இவரை அடுத்த சிவகார்த்திகேயன் என பேச துவங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.