உயிருள்ளவரை உஷா கங்கா காலமானார்.. திரையுலகினரை துரத்தும் மாரடைப்பு பிரச்சனை.. பிரபலங்கள் இரங்கல்

Published on: November 11, 2023
---Advertisement---

”உயிருள்ளவரை உஷா” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கங்கா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ள உஷா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம். அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் ஹீரோவாகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து வந்தார் கங்கா.

இதையும் படிங்க: ரோலக்ஸ்லாம் கொடுத்தேன்!.. எங்கிட்டேயே மோதுறியேப்பா.. கங்குவா vs இந்தியன் 2 கிளாஷ்.. ரிலீஸ் தேதி இதோ!

சிதம்பரத்தை அடுத்த சிற்றூரில் பிறந்து சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்த கங்கா கடைசி வரை திருமணம் செய்துக் கொள்ளாமல் சினிமா மற்றும் சின்னத்திரைகளில் நடித்து வந்தார்.

கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் பல படங்களில் அப்பா வேடங்களிலும் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கடைசியா ராகவா லாரன்ஸ் முகத்துல சந்தோஷம்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் இதோ!..

சினிமா பிரபலங்கள் சமீப காலமாக மாரடைப்பு காரணமாக 50 முதல் 60 வயதிலும் அதற்கு குறைவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் உயிரிழந்து ஒட்டுமொத்த திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், கங்கா தனது 63 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.