நியுமராலேஜ் பார்க்கும் ஆண்டவர் ரசிகர்கள் ! - ’வி’னாலே ஹிட்டு தானா?
நடிகர் கமல் நடித்து வருகிற 3 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு பொது மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் புக்கிங் துவங்கிய நிலையில் அதிகமான திரையரங்குகளில் புக்கிங் ஃபுல்லாகி வருகிறது.
’வ’ என்கிற எழுத்து நடிகர் கமலுக்கு ராசியான எழுத்து என்று அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் அஜித்திற்கு இப்படி ’வ’ வரிசையில் படத்திற்கு பெயர் வைப்பது அதிர்ஷ்டமாக பார்க்கப்பட்டது. அதனால் அவரது படங்களுக்கு விவேகம், விஸ்வாசம், வீரம், வேதாளம், வலிமை என பெயர் வைக்கப்பட்டது.
அதே போல கமல் திரைப்படங்களிலும் ’வ’ வரிசையில் வந்த பல திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்த படங்களாகவும், அதிகம் பேசப்பட்ட படங்களாகவும் இருந்துள்ளன.
அவை:
வறுமையின் நிறம் சிவப்பு , வாழ்வே மாயம், விக்ரம், வெற்றி விழா, விருமாண்டி, வசூல் ராஜா, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், விக்ரம் (2022) ஆகியவை ஆகும்.
எனவே இதனால் தற்சமயம் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படமும் அதிக வரவேற்பை பெறும் என ரசிகர்கள் வட்டாரத்தில் எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.