கடந்த 13 வருடங்களில் இயக்கிய திரைப்படங்கள் 5 மட்டுமே. ஆனால் தற்போது முன்னணி இயக்குனராக முன்னணி நடிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தால் அது சரியாக வரும் வரை ரொம்ப மெனக்கெடுவார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது அசுரன் மட்டுமே. மற்ற அனைத்து திரைப்படங்களும் 2,3 வருடங்கள் காத்திருந்து எடுக்கப்பட்டன.
Also Read

தற்போது தயாராகி வரும் விடுதலை திரைப்படம் கூட சிறிய கால கட்டத்தில் முடிக்கக்கூடிய திரைப்படம் என்று கூறப்பட்டு தற்போது அதன் ஷூட்டிங்கும் வருடக்கணக்கில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன் –விஷால் கையை உடைத்து கேரளாவுக்கு அனுப்பிய படக்குழு.! வெளியாக அதிர்ச்சி வீடியோ.!
இதற்கிடையில் சூர்யாவை நாயகனாக வைத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன், வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை விடுதலை பட ஷூட்டிங் நிறைவு பெறாத காரணத்தால் வாடிவாசல் என்ன நிலைமை என்று இன்னும் தெரியவில்லை. வாடிவாசல் சூட்டிங் தகவல் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் வெற்றிமாறன் பேட்டை காளி எனும் வெப் சீரிஸை தயாரிக்கவும் செய்துவிட்டார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவான இந்த வெப் சீரிஸில் மண்டேலா பட ஹீரோயின் ஷீலா ராஜ்குமார் முதனமை வேடத்தில் நடித்துள்ளார். aha OTT தளத்தில் வெளியாகியுள்ளது.



