வாலி தமிழ் சினிமா படலாசிரியர்களில் ஒருவர். இவர் பாடலாசியரை தாண்டி சிறந்த கதையாசிரியர், நடிகரும் கூட. இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல்களில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்.அனைவருக்கும் புரியகூடிய வகையில் இவரின் பாடல்கள் இருக்கும். மேலும் 50-களில் தொடங்கி 2014ஆம் ஆண்டு வரையிலும் பாடல்களை எழுதி சாதனை படைத்துள்ளார். அழகர் மலை கள்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசியராய் அறிமுகமானார்.
அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட கவிஞர் இவர். அன்பே வா, விதி, உயர்ந்த மனிதன் என பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல்கள் இன்று கூட நின்று பேசும் அளவிற்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.சேர்க்க வேண்டிய இடத்தில் சரியாக சேர்த்து நீக்க வேண்டிய இடத்தில் சரியாக நீக்கி பாடல்களை மிக அழகாக வழங்குவதில் வல்லவர். இவர் எதையும் நேருக்கு நேர் பேசும் குணமுடையவர். இவர் சில வருடங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் வெளியான பாணாகாத்தாடி திரைப்படத்தில் கூட பாடல்களை எழுதியுள்ளார்.
இதையும் வாசிங்க:கடனில் சிக்கி வீடு ஜப்தி!.. கண்ணதாசன் எழுதிய அந்த பாட்டு!.. கவிஞருக்கு இவ்வளவு சோகமா!..
வழக்காமான காட்சிகளுக்கு அற்புதமான பாடல்களை எழுதுவதில் இவர் கைதேர்ந்தவர். 1964 ஆம் ஆண்டு இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம்தான் தெய்வதாய். இப்படத்தில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, அசோகன், நம்பியார் போன்ற பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தினை வீரப்பன் தயாரித்தார்.
இப்படம் மிக பெரிய வெற்றியை சந்தித்தது. இப்படத்தில் எம்.ஜி.ஆர் தனது காதலியான சரோஜாதேவியை நினைத்து பாடும் பாடல்தான் ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை என்ற பாடல் இப்பாடலை எழுதியது வாலி. இப்பாடலை எழுதும் போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் வாசிங்க:இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..
இப்பாடலில் அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இவ்வரிகளில் பிழை இருப்பதாக இப்படத்தில் நடித்த சீதாராமன் என்ற நடிகர் படத்தின் தயாரிப்பாளரான விரப்பனிடம் கூறியுள்ளார். எந்த ஒரு மலரிலும் ஒளி இருப்பதில்லை. ஆனால் கவிஞரோ மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை என வரிகளை எழுதியுள்ளாதாக கூறியுள்ளார்.
இதனை தயாரிப்பாளர் வாலியிடம் கூற நான் தவறு என்றால் பாரதியாரின் வரிகளும் தவறே. பாரதியார் தனது கவிதையில் ”சோலை மலரொளியோ உந்தன் சுந்தர புன்னகையோ” என குறிப்பிட்டுள்ளார். எனவே மலரில் ஒளி என்று கூறுவது வெளிச்சத்தை அல்ல அதன் அழகைதான் என கவிஞர் வாலி வீரப்பனுக்கு விளக்கம் அளித்துள்ளார். பின் அவ்வரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என கூறிவிட்டாராம் வாலி. அப்பாடலும் ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை…அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை… என்றே உருவாக்கப்பட்டது.
இதையும் வாசிங்க:ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…