இசைஞானி இளையராஜா சிறப்பான பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்ததோடு, படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார். மேலும், 80களில் பல படங்கள் இளையராஜாவின் இசையை நம்பியே உருவானது. அவரும் தனது இசையால் பல திரைப்படங்களை வெற்றிப்படமாக மாற்றினார்.
ஆனால், சினிமாவில் பெரிய இசையமைப்பாளராக வருவதற்கு முன் அவரும் வாய்ப்பு தேடி அலைந்தவர்தான். தனது திறமையை புரிந்துகொள்ள ஒரு தயாரிப்பாளர் கிடைக்கமாட்டாரா என ஏங்கியவர். அப்படித்தான் பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவுக்கு அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
இதையும் படிங்க: வாலி சொன்ன ஒரு வார்த்தை!.. பாரதிராஜா வாழ்க்கையில் அப்படியே பலித்த அந்த சம்பவம்!..
அப்படத்தில் சிறப்பான பாடல்களை கொடுத்து தான் யார் என நிரூபித்தார் இளையராஜா. ஆனால், ராஜாவின் மீது சந்தேகப்பட்டு வாலி அவருக்கு வைத்த டெஸ்ட் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். இளையராஜா கன்னட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்தபோதே ராஜாவை வாலிக்கு தெரியும்.
அதன்பின் அன்னக்கிளி படத்தில் இசையமைத்து பிரபலமாகிவிட்டார். முதன் முதலாக ராஜாவின் இசையயில் பாடல் எழுத வாலி செல்கிறார். அது ஏசி திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவக்குமார் ஹீரோவாக நடித்த பத்திரக்காளி திரைப்படம். ராஜாவை பார்த்ததும் வாலிக்கு சந்தேகம். உண்மையிலேயே இவர் விஷய ஞானம் உள்ளவர்தானா என பரிசோதிப்பதற்காக ‘உங்களுக்கு கர்நாடக சங்கீதம் தெரியுமா?’ என கேட்க, ராஜாவோ ‘கொஞ்சம் தெரியும்ணே’ என சொல்லியிருக்கிறார்.
வாலியோ ‘தியாகராஜரின் கீர்த்தனைலாம் உங்களுக்கு தெரியுமா?’ என கேட்டுள்ளார். அதற்கும் ராஜா ‘ஓரளவுக்கு தெரியும்ணே’ என சொல்ல, ‘எதக்கேட்டாலும் ஓரளவுக்கு தெரியும்ணு சொன்னா எப்படி?’.. ‘ சரி திருப்பதியில திரை விலகும்போது தியாகராஜர் தெலுங்கு கீர்த்தனை ஒன்னு பாடுவாங்க அது தெரியுமா?’ என கேட்க அதற்கும் ராஜா ‘ஓரளவுக்கு தெரியும்ணே’ என சொல்ல, வாலியோ விடவில்லை.
இதையும் படிங்க: ‘முன்பே வா’ பாடல் உருவாக இத்தனை பஞ்சாயத்தா? வாலிக்கும் இயக்குநருக்கும் இடையே முற்றிய வாக்குவாதம்..
‘தெரியுமா.. சரி நான் நம்பணும் இல்ல.. அதுக்காக அத பாடி காட்டுங்க’ என சொல்ல, நமக்கு இசை ஞானமும், விஷய ஞானமும் இருக்கான்னு வாலி சோதிக்கிறார் என்பதை புரிந்துகொண்ட ராஜா, அந்த கீர்த்தனையை தனது ஆர்மோனியத்தில் வாசித்தவாறே பாடி காட்டியுள்ளார். அச்சி பிசராமல், சுருதி மாறாமல் அவர் அப்படியே பாடியதை கேட்டு வாலி அசந்து போனாரம். அதன்பின்னரே ராஜாவுக்கு இசைஞானம் உண்டு என வாலி நம்பியிருக்கிறார். அதன்பின் அவர் எழுதிபாடல்தான் ‘கேட்டேளே அங்கே. பார்த்தேளா இங்கே’ என்கிற பாடல்.
இளையராஜாவை சோதித்துவிட்டு அவருக்கு வாலி எழுதிய இந்த முதல் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காத்திருந்த ஏவி மெய்யப்ப செட்டியார்!.. ஜாலியாக சரக்கடித்து கொண்டிருந்த வாலி!.. ஆனாலும் எழுதினாரு சூப்பர் பாட்டு!…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…