போட்டி போட்டு கல்லா கட்டுதே!… வசூலில் கொட்டுக்காளியை மிஞ்சிய வாழை..
Vaazhai: சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படமும் நேற்று வெளியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது இணைப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொட்டுக்காளி திரைப்படமும் மற்றும் வாழை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் தான் ரிலீஸ் ஆகியது. இதனால் இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெறும் எனது எதிர்பார்க்கப்பட்டது. சூரி, அன்னாபென் நடிப்பில் உருவான இப்படத்தை பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..
சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். சில திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட இப்படம் விருதுகளை குவித்தது. அத்தகைய சிறப்புடன் நேற்று வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் 45 முதல் 50 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் கொட்டுக்காளி திரைப்படம் எல்லா வகை ரசிகர்களுக்கும் விருப்பமானதாக அமையவில்லை. பலரிடம் கலையான விமர்சனங்களை பெற்றது. இதில் சூரியின் நடிப்பு மட்டுமே பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. சில இடங்களில் திரைக்கதை சொதப்பியதே வசூல் குறைந்தது காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீனாவிடம் சிக்கிய ரோகிணி.. குழம்பி நிற்கும் கோபி… தங்கமயில் செய்த பெரிய விஷயம்..
இதே நாளில், நேற்று வெளியான மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் கிட்டத்தட்ட பாசிட்டிவ் விமர்சனங்களை அதிகமாக குவித்து இருக்கிறது. நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பிரபலங்கள் மட்டுமே தெரிந்த முகமாக இருக்க பல புதிய முகங்களை வைத்து படத்தை மாரி செல்வராஜ் தன்னுடைய திரைக்கதை மட்டுமே நம்பி எடுத்து இருக்கிறார்.
அதை அவர் சரியான விதத்தில் கையாண்ட நிலையில், படத்தின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே ஒரு கோடியை தாண்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் நாட்களில் இப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வசூலும் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.