இவ்ளோ பேர் பாராட்டியும் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?!.. வாழை படத்தின் இரண்டு நாள் வசூல்!...

by சிவா |
vaazhai
X

#image_title

Vaazhai: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் மாரி செல்வராஜ். அதற்கு காரணம் அவர் எடுத்துக்கொள்ளும் கதைக்களம்தான். கடந்த 50 வருடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்கள், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட வலி. அவர்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்தினார்கள்? என்பதுதான் மாரியின் கதைக்களம்.

இவர் இயக்குனர் ராமிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படமே ரசிகர்களிடம் அதிர்வலைகளை உண்டாக்கியது. மேலும், பலராலும் பாராட்டப்பட்டது. அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: படக்குழுவே சொல்லாத அப்டேட்! கோட் பட சீக்ரெட்டை இப்படி உடைச்சிட்டாரே மீசை ராஜேந்திரன்

அதன்பின் உதயநிதி ஸ்டாலினை வைத்து அவர் இயக்கிய மாமன்னன் படமும் விவாதங்களை உருவாக்கியது. இந்த படத்தில் வடிவேலு இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம்தான் வாழை. இது அவர் சிறுவனாக இருந்தபோது அவருக்கு நடந்த சம்பவத்தை அடிப்பையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். மணிரத்னம், வெற்றிமாறன், மிஷ்கின், பாலா போன்ற இயக்குனர்களும் இப்படத்தை நெகிழ்ந்து பேசியிருக்கிறார்கள். இயக்குனர் பாலா எதுவும் பேச முடியாமல் கண்கள் கலங்கியபடி வெளியே வந்து மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டார்.

vaazhai

#image_title

வாழை படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் கண்கள் கலங்கியபடியே வருகிறார்கள். அதிலும், படம் முடிந்தும் பலரும் இருக்கையிலிருந்து எழாமல் அப்படியே அமர்ந்திருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு வாழை திரைப்படம் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், படம் வெளியாகி 2 நாள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் கிட்டத்தட்ட 4 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் முதல் நாள் 1.20 கோடியும், இரண்டாம் நாளான சனிக்கிழமை இப்படம் 2.50 கோடி என மொத்தம் 3.70 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பெரிய நடிகர்களின் கமர்ஷியல் படங்கள் முதல்நாளில் 25 கோடி 50 கோடி என்றெல்லாம் சொல்லப்படும்போது பல இயக்குனர்களாலேயே பாராட்டப்படும் வாழை படம் குறைந்த வசூலையே பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பெரிய ஹீரோக்கள் இல்லை. மேலும், இது மாரியே சொந்தமாக தயாரித்திருக்கிறார். ஒருபக்கம், படத்திற்கு நல்ல விமர்சனம் வருவதால் போகப்போக கூட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?

Next Story