வடசென்னை 2-க்கே இன்னும் விடை தெரியல., விடுதலை-2 வருதாம்.! பிளான் போட்டார் வெற்றிமாறன்.!?

இயக்குனர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்கள் இருந்தும் இதுவரை எடுத்த மொத்த படங்களே வரும் 5 தான். ஆனால் , அந்த 5 படங்களுமே தரமான படங்கள். அவற்றில் பெரும்பாலான படங்கள் பல்வேறு விருதுகளை குவிந்துள்ளன. அதே போல வசூலிலும் நல்ல இடத்தில் உள்ளன.
இவர் ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தை முதல் பக்கத்தோடு விட்டுவிட்டார். அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என தனுஷ், வெற்றிமாறன், அமீர் , சமுத்திரக்கனி என யார் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கேட்டு கேட்டு, தற்போது அவர்களே நொந்து போய்விட்டனர்.
இதையும் படியுங்களேன் - இதுவரை 30 கோடி நஷ்டம்.! தலையில் அடித்துக்கொள்ளும் மாஸ்டர் தயாரிப்பாளர்.!?
இதற்கிடையில் விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, நினைத்ததை விட விடுதலை பெரிதாகிவிட்டது. அதனால், இரண்டு பாகத்திற்கான ஷூட்டிங்கும் முடிந்து விட்டது. முதலில் விடுதலை 1ஆம் பாகம் வெளியாகி அதன் பின்னர் 2ஆம் பாகம் 3 மாதம் கழித்து வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனை அறிந்த ரசிகர்கள், முதலில் வடசென்னை 2ஆம் பாகத்தை தயார் செய்யுங்கள், அதன் பிறகு விடுதலை 2ஆம் பாகம் பற்றி கூறுங்கள் என தங்கள் ஆசையை தெரிவித்து வருகின்றனர்.