ஓவர் பிடிவாதமா இருக்காதீங்க சார்.. கடுப்பான வெற்றிமாறன்… வடசென்னை 2ல் முக்கிய மாற்றம்…

by Akhilan |
ஓவர் பிடிவாதமா இருக்காதீங்க சார்.. கடுப்பான வெற்றிமாறன்… வடசென்னை 2ல் முக்கிய மாற்றம்…
X

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக வடசென்னை அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து வெற்றிமாறன் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: என்னங்கடா கங்குவான்னு சொல்லிட்டு பாகுபலியை ரீமேக் பண்ணி வச்சிருக்கீங்க!.. ரசிகர்கள் ட்ரோல்!..

ஆனால் பல வருடங்கள் கடந்தும் அதற்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறனிடம் வடசென்னை2 எப்போது என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தனர். அவ்வப்போது, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இன்னும் சில காலம் இருக்கிறது. வாடிவாசல் முடிந்ததும் தொடங்கலாம் எனவும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், வடசென்னை2 படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இடையே பிரச்னை வெடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த பிரச்னையால் தற்போது இருவரும் எதிரும், புதிருமாக மாறிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: 5 வயதிலேயே டியூன் போட்ட யுவன்!.. அதை காப்பி அடித்த இளையராஜா!. அட இது அவரே சொன்னது!…

இதனால் தான் வடசென்னை2 படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமலே இருக்கிறது. இருவரின் நெருங்கிய வட்டாரமும் இணைந்து பலகட்ட சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இருவருக்கும் தற்போது ஒத்துப்போவதாக இல்லையாம். இதனால் வடசென்னை2 படத்தினை வெற்றிமாறன் இயக்க போவதில்லையாம். அவருடைய உதவி இயக்குனரான கார்த்திகேயன் இயக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

அன்பு மற்றும் ராஜன் கேரக்டர் வடசென்னை2 படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தனுஷ் இப்படத்தில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமீர் மட்டுமே இப்படத்தில் நடிக்கலாம் என்றும் தனுஷ் கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர் கூட நடிக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்து வருகிறது. இந்த வெற்றிக்கூட்டணி இல்லாமல் வேறு நடிகருடன் வடசென்னை2 வெளிவந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

Next Story