இந்த சீனை ஏன்யா தூக்குனீங்க!.. வடக்குப்பட்டி ராமசாமி டெலிட்டட் சீன் வைரலாகுது.. நிழல்கள் ரவி மாஸ்!
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம். எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் ரீதியாக பெரிதாக படம் கலெக்ட் செய்யவில்லை என்றாலும், தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம் என்பது கியாரண்டியான விஷயம் தான்.
இதையும் படிங்க: செல்பி புள்ளையாகவே மாறிய விஜய்!.. ரசிகர்களுடன் எடுத்த அடுத்த வீடியோ.. இது செம வைரல்…
ஞாயிற்றுக்கிழமை வரை படத்திற்கு 4 கோடி ரூபாய் வரை வசூல் வந்திருப்பதாகவும், திங்கட்கிழமையான இன்று படத்தின் வசூல் அதள பாதளத்திற்கே சென்று விட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில், படத்தில் இருந்து நிழல்கள் ரவி மற்றும் கூல் சுரேஷ் நடித்த டெலிட்டட் சீன் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
டிக்கிலோனா படத்திலேயே கேஜிஎஃப் ரேஞ்சுக்கு நிழல்கள் ரவியை பில்டப் கொடுத்து விட்டு கடைசியில் அவரை பைத்தியமாக மாற்றி காமெடி செய்திருப்பார்கள். இந்நிலையில், உடல் முழுக்க வெடி குண்டுகளை கட்டிக் கொண்டு மேஜர் என்கிற கதாபாத்திரத்தில் அவர் செய்யும் கமெடிகள் வேற லெவல் ரகளை தான். கூல் சுரேஷ் செத்த பிணமாக நடித்துள்ள நிலையில், அவரை கொண்டு போய் அடக்கம் பண்ணிவிட்டு வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தி அடக்கம் செய்யும் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் தப்பு செய்யும் தனுஷ்!… கேப்டன் மில்லர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா?
இந்த சீனும் செம சூப்பரா இருக்கே ஏன்ய்யா தூக்குனீங்க என கார்த்திக் யோகியையும் சந்தானத்தையும் பார்த்து படம் பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூடிய விரைவில் ஓடிடியில் இந்த படம் வந்துவிடும் பின்னர் குடும்பம் முழுக்க வீட்டிலேயே படுத்துக் கொண்டு படத்தை பார்த்து சிரிக்கலாம். இப்போதைக்கு டெலிட்டட் சீன் விட்டதுக்கு நன்றி என ஓடிடி ரசிகர்கள் ஓவராக ஓட்டி வருகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms