More
Categories: Cinema History Cinema News latest news

ரசிகர்களை சிரிக்க வைத்த அந்த வடிவேல் காமெடி ஒரு நிஜ சம்பவமா?!.. அட தெரியாம போச்சே…

Actor vaivelu: மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர்தான் வடிவேலு. சின்ன சின்ன வேலைகள் செய்தார். ராஜ்கிரணின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக கூட இருந்தார். என் ராசாவின் மனசிலே படம் உருவான போது அந்த படத்தில் சில காமெடி காட்சிகளில் அவரை ராஜ்கிரண் நடிக்க வைத்தார்.

ஒல்லியான தேகம், மதுரை பாஷை என அவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. சின்னகவுண்டர் படத்தில் அவருக்கு கொடைபிடிக்கும் வேடத்தை விஜயகாந்த் கொடுத்தார். அதன்பின் சிங்கார வேலன், தேவர் மகன் என சில படங்களில் நடித்து மெல்ல மெல்ல முன்னேறினார். பெரும்பலாலும் கிராம கதைகளில் நடித்தார். ஒருபக்கம், காதலன் போன்ற படங்களிலும் கலக்கினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: என்னை அடித்த வடிவேலுவை இப்படிதான் பழி வாங்கினேன்!. காதல் சுகுமார் செம கெத்துதான்!..

கவுண்டமணி சினிமாவில் நடிப்பதை குறைத்துகொண்டபோது வடிவேலு முன்னணி காமெடி நடிகராக மாறினார். அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். வின்னர், தலைநகரம், சந்திரமுகி, ஏழுமலை ஆகிய படங்களில் இடம் பெற்ற வடிவேலுவின் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

வடிவேலுவை பொறுத்தவரை நகைச்சுவை காட்சிகளை எழுதுவதற்கு யாரையும் வைத்துக்கொள்ளமாட்டார். அவரின் கார் ஓட்டுனர், மேனேஜர், உதவியாளர் என எல்லோருமே மதுரையில் அவருடன் நண்பர்களாக இருந்தவர்கள்தான். அடுத்தநாள் ஒரு காமெடி காட்சியில் நடிக்க வேண்டும் எனில் முதல்நாள் உட்கார்ந்து தனது குழுவுடன் அமர்ந்து விவாதிப்பார்.

இதையும் படிங்க: சொந்த தம்பிக்கு கூட உதவாத வடிவேலு!.. இவ்வளவு சுயநலமா?.. கிழித்து தொங்கவிட்ட பயில்வான்..

அப்போது அவர்களின் இளமை காலத்தில் மதுரையில் நடந்த சம்பவத்தை ஒருவர் நினைவு கூற, அதை தொடர்ந்து என்ன நடந்தது என எல்லோரும் பேச அப்படியே ஒரு காமெடி காட்சியை உருவாக்கி விடுவார்களாம். இப்படித்தான் வடிவேலு தான் நடிக்கும் பெரும்பாலான காமெடி காட்சிகளை உருவாக்கி வந்தார். அதனால்தான், அவரின் காமெடிகள் ரசிகர்களின் வாழ்வோடு ஒன்றி போயிருந்தது.

ஒரு திரைப்படத்தில் வடிவேல் ஒரு பீடாக்கடையில் நிற்கும்போது அவர் மீது சாணியை வீசுவார்கள். உடனே, அவர் தனது குருநாதரை அழைத்து வந்து ‘வந்துட்டான்டா என் தலைவன்.. இப்ப வீசுங்கடா’ என்பார். அவரின் முகத்திலும் சாணியை வீசுவார்கள்.

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி இது. உண்மையில் வடிவேலு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவமாம். வாலிப வயதில் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து அந்த ஊரில் அலப்பறை செய்து கொண்டிருந்த ஒருவர் மீது சாணி வீசினாராம். அந்த சம்பவத்தைத்தான் அந்த காமெடி காட்சியில் பயன்படுத்தியிருந்தார் வடிவேலு.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு பல சம்பளம்!.. வடிவேலு செஞ்ச அட்ராசிட்டியில் கண்ணீர்விட்ட தயாரிப்பாளர்கள்…

Published by
சிவா

Recent Posts