நடிகையை ரோட்டில் படுக்க சொன்ன இயக்குனர்.! கடுப்பாகி நானே பண்றேன் என கிளம்பிய வடிவேலு.!
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான இயக்குனர் திருமுருகன். இவர் அதன் பின்னர் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் எம் மகன். இந்த திரைப்படம் அப்பா - மகன் இடையேயான உறவை அப்படியே தத்ரூபமாக காட்டியிருக்கும்
வடிவேலு, சரண்யா பொன்வண்ணன், நாசர் நடிப்பு மிக பிரமாதமாக இருந்ததால் படம் அனைவரையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமானது. இந்த படத்தில் வரும் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய எவர்க்ரீன் காட்சிகளாக இருக்கிறது.
இதையும் படியுங்களேன் - 2 நாள் ஆயிடிச்சு, நம்ம சேட்டைய ஆரம்பிச்சிடுவோம்.! ரஜினி பட இயக்குனர் செய்த வேலை தெரியுமா.?!
அதில் ஒரு காட்சியில் குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தில் சரண்யா பொன்வண்ணன் படுத்து உருளுவது போல காட்சியமைக்க பட்டிருக்கும். அதில் முதலில் சரண்யா நடிக்கவே மாட்டேன் என அடம்பிடித்தாராம். இயக்குனர் எவ்வளவோ கெஞ்சி பார்த்தாராம்
இதனை பார்த்த வடிவேலு, அந்தம்மா நடு ரோட்டுல உருளலான என்ன நான் உருளுறேன் என கூறிவிட்டாராம். அதற்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்து, அது இவர்கள் செய்தால் தான் சரியாக இருக்கும் என கூறி அவரை நடிக்க வைத்துள்ளனர். பிறகு எப்படியோ சம்மதித்து சரண்யா பொன்வண்ணன் நடித்ததால் தான் தற்போதும் அந்த காட்சி நம்மை சிரிக்க வைக்கிறது.