வடிவேலு இப்படிப்பட்டவரா...? கைதூக்கி விட்ட அவரையே நம்ப வச்சி ஏமாற்றிவிட்டாரே...!

வைகைப்புயல் வடிவேலு நடித்த படங்கள் என்றாலே அங்கு காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் இயக்குனர் வி.சேகர் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுவார். அந்த வகையில் காலம் மாறிப்போச்சு, நம்ம வீட்டு கல்யாணம், வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம், நான் பெத்த மகனே, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் ஆகிய படங்களில் வடிவேலு காமெடியில் பட்டையைக் கிளப்புவார். அப்படிப்பட்ட இயக்குனரையே வடிவேலு நம்ப வச்சி ஏமாற்றி விட்டாராம். வாங்க இயக்குனர் வி.சேகர் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

இதையும் படிங்க... ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட தயங்கிய எஸ்.பி.பி!.. ரோஜா படத்தில் நடந்த சிறப்பான சம்பவம்!..

வடிவேலுவால் எனக்கு ஒரு பாதிப்பு வந்தது. என் பையனை வச்சி 'சரவண பையன்'னு ஒரு படம் எடுக்கலாம்னு நினைச்சேன். அதுல நடிக்க வடிவேலுவைக் கூப்பிட்டேன். 'அண்ணே கவலைப்படாதீங்கண்ணே... என்னை எப்படி ஒரு 10 படத்துல தூக்கி விட்டீங்களோ, அதே மாதிரி உங்க பையனுக்கும் அண்ணனா, மாமனா பண்ணி ஏதோ ஒண்ணு தூக்கிடலாம்ணே..'ன்னு சொன்னான். இதை சொல்லித் தான் நான் எம்பிஏ படிச்சவனை, என்ஜினீயரிங்லாம் படிச்சவனை வெளிநாட்டுக்குப் போறவனைக் கொண்டு வந்து இறக்கினேன்.

'சரி...'ன்னு சொன்னான். சொல்லிட்டு கதை எல்லாம் கேட்டு படம் எழுதி பண்ணினோம். திடீர்னு நான் 'எலெக்ஷனுக்குப் போயிட்டு வந்துடறேன். ஒரு மாசம் தள்ளிப்போடுங்க..'ன்னு சொன்னான். எந்த எலெக்ஷன்னு கேட்டேன். 'நான் திமுக சார்பா பிரச்சாரம் பண்ணப் போறேன்'னு சொன்னான்.

கலைஞர் தான் எனக்குக் கூட கல்யாணம் பண்ணி வச்சாரு. எங்க வீட்டுல 8 கல்யாணம் கலைஞர் தலைமையில தான் நடந்தது. அது எங்க மாமனார் திமுக. அதனால கூட்டிட்டு வந்தாரு. இது பர்சனல். 'திமுகல போயி வேலை செஞ்சேன்னா என் படத்தை யாரு பார்ப்பா? எல்லாரும் பார்க்குறாங்கல்ல. நீ திமுக போய் பிரச்சாரம் பண்ணினா அதிமுக ஆள்கள் எல்லாம் படம் பார்க்க மாட்டாங்கல்ல..'ன்னு கேட்டேன்.

Viraluketha veekkam

Viraluketha veekkam

'இல்லண்ணே... நான் திமுகல நின்னு ஜெயிக்கறேன் அண்ணேன்.. ஜெயிச்சா என்னை அழகிரி அண்ணேன் எம்பி யா ஆக்கிடுதேன்னு சொன்னாங்கண்ணே'ன்னு சொன்னாரு. செய்வாங்க. 'இப்ப பீக்ல இருக்கேல்ல... இப்ப நீ அங்க போனா அது அடிபடும்ல' என்று கேட்டேன். 'தோத்துட்டா சிக்கல் தானே..'ன்னு சொன்னேன். 'இல்ல நான் போற இடத்துல எல்லாம் கூட்டம் அதிகமா இருக்கு. கண்டிப்பா நான் ஜெயிக்கிறேன்..'னு சொன்னான்.

'யோவ் ஜெயிக்கறது, தோக்கறது நான் தான் சொல்றேன்ல... எங்கள விட திமுகவுக்கு நெருக்கமானவங்க இல்ல. எங்க மாமனாரு 80 வருஷமாக திமுகல இருக்காரு. அப்படி இருக்கும்போது நீ கொஞ்சம் அவசரப்படறே'ன்னு சொன்னேன். 'டக்'குன்னு நின்னுட்டான். நின்னவன் சும்மா இல்லாம விஜயகாந்தை அப்படி இப்படின்னு கொஞ்சம் ஓவரா பேசிட்டான். அந்த நேரம் அதிமுக, விஜயகாந்த் குரூப் ஜெயிச்சிடுச்சு. விடுவாங்களா...? புகுந்து அடிக்க வடிவேலு வீட்டை எல்லாம் நொறுக்குனாங்கன்னு சொல்றாங்க.

இதையும் படிங்க... கமலுக்கு திருப்தி இல்லையா இந்தியன் 2 மியூசிக்…? என்ன செய்யப் போகிறார் அனிருத்?

உடனே சொந்த ஊருக்குப் போயிட்டான். இன்னும் 1 வருஷத்துக்கு வர மாட்டேன்னு சொன்னான். திரும்ப வந்து விஜயகாந்துக்கிட்ட காம்ப்ரமைஸ் பண்ணு. அவரு ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டாருன்னு சொன்னேன். அவன் வரமாட்டேன்னு சொல்லிட்டான். அப்புறம் வேற வழியில்லாம என் பையன் படத்தை எடுக்க முடியாம விவேக், கருணாஸ் எல்லாம் போட்டு படத்தை மாத்தி எடுத்துட்டேன்.

இதனால என் பையன் லைஃப் போயிட்டு. வடிவேலுவுக்கும் எனக்கும் காம்போ நல்லா ஒர்க் அவுட்டாச்சு. அவனை வச்சி என் பையனைக் கொண்டு வந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். ஆனா அது இப்படி ஆயிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story