
Cinema History
அவரை வச்சு படம் எடுக்க நினைச்சது தப்பு!.. தயாரிப்பு நிறுவனத்திற்கு வடிவேலு கொடுத்த தொல்லை…
தமிழ் சினிமாவில் சில நட்சத்திரங்கள் அவர்களுக்கான இடத்தை மிக பாதுகாப்பாக பிடித்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு பிறகு இன்னொரு நடிகர் அந்த இடத்தை பிடிப்பது கடினமான விஷயமாக இருக்கும்.
உதாரணமாக நடிகர் ரஜினி, இளையராஜா போன்ற பிரபலங்களை கூறலாம். இனி ஒரு நட்சத்திரம் அவர்களது இடத்தை பிடிக்க முடியாது. நகைச்சுவையில் அப்படி ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு.

Vadivelu
வடிவேலுவின் காமெடிக்காக மக்கள் படம் பார்த்த காலமுண்டு. வின்னர் மாதிரியான படங்களை மக்கள் பலர் பார்க்காவிட்டாலும் அதில் உள்ள அனைத்து வடிவெலு காமெடிகளும் அனைவருக்கும் அத்துப்படி. அப்படி சினிமாவில் பெரும் உயரத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு.
ஆனால் தற்சமயம் தொடர்ந்து அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார் வடிவேலு. சிம்புதேவனுடன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க துவங்கியபோது அவரை குறித்த சர்ச்சைகள் ஆரம்பமாக துவங்கின. அந்த படத்தில் வடிவேலுவிற்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த படம் நின்றது.
பாடாய் படுத்திய வடிவேலு:
அதன் பிறகு இப்போது அவருடன் பணிப்புரிந்த சக காமெடி நடிகர்களே வடிவேலுவை விமர்சித்து பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் வடிவேலுவின் பெரிய ரசிகராவார். அவர் வடிவேலுவை வைத்து ஒரு திரைப்படம் பண்ண ஆசைப்பட்டார்.
அப்படி உருவான திரைப்படம்தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சுபாஸ்கரனையும் மிகவும் நோகடித்துள்ளார் வடிவேலு. படப்பிடிப்பில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் தயாரிப்பாளருக்கு போன் போட்டுள்ளார் வடிவேலு.

Vadivelu
இந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பு முடிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது தயாரிப்பாளருக்கு, இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் அந்தனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: இந்தாங்க நான் எடுத்த படம்!.. எடிட்டரை அலறவிட்ட எம்.ஜி.ஆர்.. அப்படி என்ன சம்பவம்…