வடிவேலு மன்னிப்பு கேட்கனும்! குற்ற உணர்வோடவே வாழ வேண்டியதுதான்.. நச்சுனு சொன்ன நடிகர்

Published on: February 19, 2024
vadivelu
---Advertisement---

Actor Vadivelu: என்னப்பா இது வடிவேலுவுக்கு வந்த சோதனை என்பதை போல எந்தப் பக்கம் திரும்பினாலும் சுத்தி சுத்தி வடிவேலு மீது கோல் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் வடிவேலு பற்றிய செய்தியை படிக்காமல் அந்த நாளை நம்மால் கடக்க இயலாது.

அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் தொடர்ந்து பல விதங்களில் விமர்சனங்கள் கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. அந்த ஒரு மாபெரும் மனிதர் விஜயகாந்தின் மறைவு இவர்கள் இருவரையும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன.

இதையும் படிங்க: உங்க அப்பன் வீட்டு காசா? ரஜினி , கமலே கேட்காத போது அஜித் செஞ்ச வேலைய பாருங்க.. இதெல்லாம் யாருக்கு தெரியும்?

அஜித்துக்கும் விஜயகாந்துக்கும் சொல்லிக் கொள்ளும் படியான பந்தம் இல்லை என்றாலும் வடிவேலுவையும் அப்படி விட முடியாது. ஆரம்பத்தில் வடிவேலுவை லட்சங்களை சம்பளம் வாங்க வைத்தவரே நம்ம கேப்டன் விஜயகாந்த்தான். அவருக்கு உடுத்த துணி மணிகளும் ஏற்பாடு செய்து கொடுத்தவரும் விஜயகாந்த்தான்.

அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த படங்களில் வடிவேலுவை நடிக்க வைத்ததும் விஜயகாந்த்தான். வடிவேலுவின் இந்த ஒரு சகல வாழ்க்கைக்கு ஒரு விதத்தில் விஜயகாந்தும் காரணமாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட மனிதர் இறப்பிற்குகூட வடிவேலு வரவில்லையே என்பதுதான் இன்றளவும் மக்கள் மனதில் எழும் கேள்வியாக இருக்கின்றது.

இதையும் படிங்க: கோட் திரைப்படத்தில் விஜயிற்கு வில்லனாகும் ’சூப்பர்ஸ்டார்’… கோட் படத்தின் ஆச்சரிய அப்டேட்கள்

இதை பற்றி பிரபல காமெடி நடிகர்களான ஆர்த்தியும் கணேஷ்கரும் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்கள். அதாவது அங்கு இருந்தவர்கள் யார்? நம் மக்கள்தானே. என்ன செய்வார்கள்? ஒரு வேளை வடிவேலு வந்திருந்தால் மக்களும் இந்தப் பிரச்சினையை அன்றோடு மறந்திருப்பார்கள். இவர் வராமல் போனதுதான் அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. வடிவேலு இருக்கும் வரை மக்கள் அவரை தூற்றிக் கொண்டேதான் இருப்பார்கள்.

விஜயகாந்த் எந்தவிதத்திலும் வடிவேலுவுக்கு துரோகம் செய்யவில்லை. ஆனால் வடிவேலு செய்திருக்கிறார். அதனால் வடிவேலு வந்து கண்டிப்பாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். நல்லதுக்கு போகவில்லை என்றாலும் கெட்டதுக்கு போக வேண்டும் என சொல்வார்கள். அப்போதுதான் அந்த ஆன்மா மேல் இருந்து நம்மை பார்த்து சந்தோஷப்படுமாம். அதனால் விஜயகாந்த் ஆன்மா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இதையும் படிங்க: தனக்கு வாழ்க்கை கொடுத்த பிரபல இயக்குனரை அசிங்கப்படுத்திய அஜித்… ஆனா இப்படிலாமா பேசுவீங்க?

மேலும் விஜயகாந்த் புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் வடிவேலுக்கு இது ஒரு குற்ற உணர்ச்சியாகவே இருக்கும். அவர் செய்த அந்த குற்றம் கடைசி வரை அவரை பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என கணேஷ்கரும் ஆர்த்தியும் கூறினார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.